சாவகச்சேரி வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் நேற்றைய தினம் எவரும் இல்லாத நிலை:வைத்தியர்pடம் பேள்வி எழும்பும் பிரதேச மக்கள்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி வைத்தியசாலைக்கு நோயாளி ஒருவரை நள்ளிரவு வேளை சிகிச்சைக்காக கொண்டு சென்ற வேளை வைத்தியசாலை வெளிநோயாளர் பிரிவில் எவரும் இல்லாத நிலையில், நோயாளியை யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதிக்கப்பட்டுள்ளார். விஷ கடிக்கு உள்ளான நபர் ஒருவரை அவரது உறவினர்கள் நேற்றைய தினம் இரவு சாவகச்சேரி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளனர். அதன் போது வெளிநோயாளர் பிரிவில் எவரும் கடமையில் இருக்கவில்லை. அதனால் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் அறைக்கு சென்று பார்த்த போதும், அங்கு பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களும் கடமையில் இருக்கவில்லை. அதனால் நோயாளியை உறவினர்கள் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர் நோயாளியை சாவகச்சேரி வைத்தியசாலைக்கு உறவினர்கள் அழைத்து வரும் போது, வைத்தியசாலையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள், வைத்தியசாலை உத்தியோகஸ்தர்கள் கடமையில் இல்லாதமை தொடர்பில் திணைக்கள ரீதியான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.அதேவேளை எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில், வைத்தியசாலையில் முறைப்பாட்டு இலக்கமாக கைத்தொலைபேசி இலக்கத்தினை காட்சிப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.