கனடா தமிழர்கள் மத்தியில் பிரபல்யமாகி வரும் அனுர குமார திசநாயக்க.

தேசிய மக்கள் சக்தி பிரபல்யமிக்க கட்சியாக மாறி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நிலையில் எதிர்வரும் 23ஆம் திகதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான உயர்மட்ட குழுவொன்று கனடாவுக்குச் செல்ல உள்ளது.

இலங்கையில் இருந்து தமிழ் மக்கள் அதிகமாக புலம்பெயர்ந்து வாழும் நாடான கனடா வாழ் தமிழ் மக்களுடனும் அனுர மக்கள் சந்திப்புகளை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தச் சந்திப்புகள் தமிழ் மக்கள் ஜே.வி.பி. மீது கொண்டுள்ள சில கசபான அனுபவங்களை மறுசுழற்சிக்கு உட்படுத்த தூண்டும் என புலம்பெயர் தமிழர்கள் தெரிவிக்கின்றனர். கனடா வாழ் இலங்கையர்கள் மத்தியில் தேசிய மக்கள் சக்தி பிரபல்யமிக்க கட்சியாக மாறி வருகிறது.

சிங்களம், தமிழ் என அனைத்து தரப்பு மக்களும் தேசிய மக்கள் சக்தியின் பிரதிநிதிகளை புலம்பெயர் நாடுகளில் சந்திக்கின்றனர்.  இந்நநிலையில் இம்மாதம் 23ம் திகதி சனிக்கிழமை மாலை 3.00 மணிக்கு ரொறன்ரொ மாநகரில் உள்ள ரொறான்ரோ பவிலியன்  மண்டபத்தில் ‘தீர்வு நோக்கிய மக்கள் சக்தியை கட்டியெழுப்புவோம்’ என்னும் கருப்பொருளில் அனுர உரையாற்றவுள்ளார்.

இந்த பொதுக் கூட்டத்தில் தமிழ் மொழி பெயர்ப்பு வசதிகளும் செய்யப்படவுள்ளன. கனடாவாழ் தமிழ் மக்களும் அனுரவின் கூட்டத்தை ஏற்பாடு செய்வதில் அதிக அக்கறையுடன் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர்.அனுரவுக்கான ஆதரவு வட்டாரம் புலம்பெயர் நாடுகளில் வெளியாகி வருவதை கண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அச்சமடைந்திருக்கக் கூடும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.