உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ-வுக்கு 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை.

உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்ட், உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 2014-ம் ஆண்டு 15 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த வழக்கில், சோன்பத்ரா மாவட்ட சிறப்பு நீதிமன்றம்  குற்றசாட்டை உறுதி செய்த நிலையில், ஏறக்குறைய 9 ஆண்டுகளுக்கு பிறகு, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதி கிடைத்துள்ளது.

பாஜக எம்எல்ஏ ராம்துலர் கோண்டுக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தற்போது ராம்துலர் கோண்டின் சட்டசபை உறுப்பினர் பதவி  பறிபோன நிலையில், அங்கு இடைத்தேர்தல் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இவர்  2022-ல் துத்தி தொகுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்வானவர். கோண்ட் எம்எல்ஏ ஆன பிறகுபாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு பல்வேறு வகையில் அழுத்தங்களை கொடுத்ததாக கூறப்படுகிறது.

 

 

இந்த நிலையில், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் நடத்திய இடைவிடாத சட்டப் போராட்டத்தால் தற்போது நீதி கிடைத்துள்ளது. பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமி தற்போது திருமணமாகி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.