சபரிமலையில் அமலான புதிய திட்டம்.

மண்டல, மகரவிளக்கு பூஜைகளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து  தரிசனம் செய்து வருகின்றனர். தற்போது சபரிமலையில் சராசரியாக ஒரு நாளைக்கு 80,000-90,000 பக்தர்கள் வருகை  தருகிறார்கள்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளதைத் தொடர்ந்து, சபரிமலையில் தரிசன நேரத்தை ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சபரிமலையில் தரிசன நேரம் 1 மணி நேரம் அதிகரிக்கப்பட்டு மாலை 4 மணிக்கு பதிலாக மதியம் 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் சபரிமலையில் ஒரு நாளைக்கு மொத்த  தரிசன நேரம் 18 மணி நேரம் ஆகும். காலை 3 மணி முதல் மதியம் 1 மணி வரையும் , மாலை 3 மணி முதல் இரவு 11 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. கடந்த சில நாட்களாக சபரிமலைக்கு வரும் பக்தர்களின் கூட்டம் காரணமாக 24 மணி நேரத்திற்கு மேலாக காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் அவதிப்பட்டு வந்தனர்.

இந்நிலையில், குழந்தைகள் கூட்ட நெரிசலில் சிக்காமல்  இருக்க தேவஸ்வம் போர்டு சிறப்பு வரிசையில் ஒன்று அமைத்துள்ளது. அதன்படி சபரிமலையில் உள்ள நடைபந்தலில் ஒன்பதாம் வரிசை வழியாக வரும் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் அங்கிருந்து காவல்துறை உதவியுடன் 18-ம் படி ஏறி சன்னதியின் ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ள வாயில் வழியாக  தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்த புதிய முறை இன்று முதல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு வரிசையில் குழந்தைகள் மற்றும் அவருடன் வரும் பெற்றோர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.