பாடசாலைகளில் கொரோனா கட்டுப்பாடுகள் இருக்காது.
Kumarathasan Karthigesu.
பிரான்ஸில் கோடை விடுமுறைக்குப் பிறகு பாடசாலைகள் அடுத்தவாரம் ஆரம்பமாகின்றன. இந்தக் கல்வி ஆண்டின் தொடக்கத்தில் பாடசாலைகளிலும் உயர் கல்வி நிறுவனங்களிலும் வைரஸ் தொடர்பான சுகாதாரக் கட்டுப்பாடுகள் எதுவும் இருக்காது என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
வகுப்பறைகளிலும் பாடசாலைச் சூழலிலும் மிகக் பெரிதாகச் சுகாதாரக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் என்று தேசிய கல்வி அமைச்சும் தொழிற்சங்கங்களும் கூட்டாகத் தீர்மானித்துள்ளன.
இன்னமும் தடுப்பூசி ஏற்றாதவர் களில் மிகக் குறைந்த எண்ணிக்கையானவர்களே இனிமேல் தொற்றுக்கு இலக்காகும் ஆபத்து இருப்பதாக மதிப்பிடப்படுகிறது.
அதேசமயம் மருத்துவ நிபுணர்கள் மற்றொரு வைரஸ் தொற்றலை உருவாகும் என்று எச்சரிக்கின்றனர். பாடசாலைகளில் கட்டுப்பாடுகளை நீக்குகின்ற அரசின் முடிவு அரசியல் ரீதியான தீர்மானமே என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பாடசாலைகள் தொடங்கிய பிறகு குளிர்காலம் ஆரம்பமாகும் சமயத்தில் எட்டாவது தொற்றலை தோன்றும் என்று அவர்கள் எதிர்வுகூறுகின்றனர்.
இதேவேளை இன்று எலிஸே மாளிகையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பாடசாலை ஆரம்பம் உட்படப் பல விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன