500 ஆண்டுகளில் இல்லாத வறட்சி நிலையில் ஐரோப்பிய கண்டம்.

உலகம் முழுவதும் 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றுகள் பல அலைகளாக பரவி மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது. இதன் எதிரொலியாக பொருளாதார தேக்கம், விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள் பற்றாக்குறை, மக்கள் தொகையில் வீழ்ச்சி ஆகிய பின்விளைவுகளையும் சில நாடுகள் சந்தித்து உள்ளன.

இதனை தொடர்ந்து, மக்கள் தொகையை அதிகரிக்க செய்யும் வகையிலான ஊக்குவிப்பு நடவடிக்கைகளையும் சில அரசுகள் மேற்கொண்டன. இதுதவிர, பருவகால மாற்றங்கள், இயற்கை பேரிடர் ஆகியவற்றாலும் நாடுகள் அடுத்தடுத்து பாதிப்புக்கு இலக்காகி வருகின்றன. இந்த சூழலில், ஐம்பெருங் கண்டங்களில் ஒன்றான ஐரோப்பிய கண்டத்தில் 500 ஆண்டுகளில் இல்லாத கடுமையான வறட்சி நிலை ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி ஐரோப்பிய ஒன்றிய கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், ஐரோப்பிய கண்டத்தில் 3-ல் 2 பங்கு பகுதிகள் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டு உள்ளன. உள்நாட்டு கப்பல் போக்குவரத்து குறைந்து உள்ளது. மின்உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது. சில வகை பயிர்களின் விளைச்சலும் குறைந்து உள்ளது என தெரிவித்து உள்ளது.