ஜனாதிபதி வெளியே ஒரு பேச்சு உள்ளே ஒரு நடவடிக்கை: துரைராசா ரவிகரன் கவலை.
ஜனாதிபதி வெளியே ஒரு பேச்சு உள்ளே ஒரு நடவடிக்கை என செயற்படுகிறார் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். மேலும், நாட்டின் தலைவர் இறுதி யுத்தத்தின் போது இறந்தவர்களை நினைவுகூர எவ்வித தடையும் இல்லை என கூறியுள்ளார்.
ஆனால் கடந்த 27 ஆம் திகதியன்று முல்லைத்தீவு மாவட்டம் மாத்திரமன்றி பல பிரதேசங்களில் மாவீரர் துயிலும் இல்லங்களில் பொலிஸாரின் அடாவடித்தனம் அதிகமாக இருந்தது.அரச தலைவர் மாவீரர்களை நினைவுக்கூர தடையில்லை என கூறிக்கொண்டிருக்க, அவருக்கு கீழே கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்ற பொலிஸார் நேரடியாக தங்களுடைய அராஜகங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இறந்தவர்களை நினைவில் கொள்வதற்கு இடம்பெறும் அராஜகங்களை அரச தலைவர் ஏன் கட்டுப்படுத்த முடியாது. என்னையும், வீரசிங்கம் அவர்களையும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் அழைத்து விசாரணை மேற்கொண்டிருந்தனர். இப்படியான அடாவடிக்கு மத்தியில் பெருந்திரளானவர்கள் வந்து உறவுகளை நினைவு கூர்ந்திருந்திருந்தார்கள்.வெளியில் ஒரு பேச்சும் உள்ளே ஒரு நடவடிக்கையுமாக மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நிறுத்தி கொண்டு அவரவர் உறவுகளை நினைவு கூரக்கூடிய வகையிலே அரச தலைவர் அதற்குரிய வழிவகைகளை மேற்கொள்ள வேண்டும்’ என தெரிவித்தார்.