நுவரெலியா தபாலகத்தை கைமாற்றுவதற்கு எதிராக மீண்டும் போராட்டம்.

செ.திவாகரன் டி.சந்ரு

நுவரெலியாவில் ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட பழமையான தபால் நிலையத்தை இந்தியாவின் தாஜ் சமுத்ரா ஹோட்டலுக்கு கைமாற்றுவதற்கு அராசாங்கம் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக நுவரெலியா தபால் நிலையத்திற்கு முன்பாக எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை வியாழக்கிழமை (30) மதிய உணவு இடைவேளையின் போதே இவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் .

நுவரெலியா பிரதான நகரின் மத்தியில் அமைந்துள்ள விலைமதிப்பற்ற வளமாக கருதப்பட்ட நுவரெலியா தபால் நிலையத்தை தாஜ் சமுத்ரா விடுதி நிறுவனத்துக்கு ஒப்படைக்க யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன இதற்கு பல்வேறு தரப்பினரும் தமது எதிர்ப்பினை வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கமைவாக தபால் நிலையத்திற்கு முன்பாக திரண்ட நுவரெலியா தபால் ஊழியர்கள் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதன் போது எதிர் வருகின்ற 2024ஆம் ஆண்டிற்கான பாதீட்டில் இருபதாயிரம் ரூபா சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரியும், வாழ்க்கைச் செலவை குறைத்திடு, மக்களுக்கு நிவாரணம் வழங்கு, மின்சாரக் கட்டணத்தை குறைத்திடு என எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஏந்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எவ்வாறாயினும் தமது பிரச்சினைக்கான தீர்வை வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களது தொழிற்சங்க நடவடிக்கையை தீவிரப்படுத்தி பாரிய போராட்டங்களை மேற்கொண்டு அரசாங்கத்தின் கொள்கைகளில் மாற்றம் கொண்டு வர முயற்சிப்போம் என தெரிவித்தனர் .