அண்ணாமலை பல்கலைக்கழக 56 பேராசிரியர்கள் பணிநீக்கம்.
கடந்த 2003-ஆம் ஆண்டு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகமானது அரசுடைமையாக்கப்பட்டது. பல்கலைக்கழகத்தை சீர்படுத்தும் பணிக்கு தமிழக அரசு சார்பில் முதன்மைச் செயலாளர் சிவதாஸ் மீனா நியமிக்கப்பட்டார். இந்த பல்கலைக்கழகத்தில் தகுதியில்லாமல் பணியாற்றத் கூடிய பேராசிரியர்கள் பற்றி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது.
அதனடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தற்போது அரசு விதிகளின்படி 56 பேராசிரியர்களாக நியமிக்கப்படவில்லை. அவர்களை பணிநீக்கம் செய்ய வேண்டும் என அரசு தரப்பில் உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, இந்த 56 பேரும் அரசின் விதிகளின்படி கல்வித்தகுதி குறைவாக இருந்தவர்கள் என கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த 56 போரையும் பணி நீக்கம் செய்ய பல்கலைக்கழக துணைவேந்தர் மூலமாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல்கலைகழக துணைவேந்தர் அவர்கள் கூறுகையில், அரசு விதிகளின்படி அவர்கள் இல்லாதா காரணத்தால் அவர்களை பணி நீக்கம் செய்ய அரசு உத்தரவு பிறப்பித்தது. ஒரே நேரத்தில் 56 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டது, பல்கலைக்கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த உத்தரவையடுத்து அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரச்சனைகள் ஏற்படுவதை தடுக்கும் வண்ணம் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.