சீனாவில் தீ விபத்து : 26 பேர் உயிரிழப்பு

வடக்கு சீனாவின் அலுவலக கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Shanxi மாகாணத்தின் Luliang நகரிலுள்ள நான்கு மாடி கட்டிடத்தில் உள்ளூர் நேரப்படி 7 மணியளவில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இதன்படி, தீ விபத்து ஏற்பட்ட கட்டிடத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட 63 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்தநிலையில், தொழிற்துறைகளில் மறைக்கப்பட்ட அபாயங்கள் குறித்து விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என சீன ஜனாதிபதி Xi Jinping அறிவுறுத்தியுள்ளார்.

சீனாவில் தொழில் தளங்களில் பாதுகாப்புத் தரங்களை கடைபிடிக்காததன் காரணமாக தீ உள்ளிட்ட பல்வேறு விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.

இதன்படி, கடந்த ஒக்டோபர் மாதம் வடமேற்கு Yinchuan மாகாணத்தில் உள்ள பார்பிக்யூ உணவகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 31 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.