தன் பாலின திருமண ஜோடிகளுக்கு சட்ட அங்கீகாரம் கிடையாது – உச்சநீதிமன்றம் தீர்ப்பு.
தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்க உச்சநீதிமன்ற அரசியல் சாசன மருவு மறுப்பு தெரிவித்துள்ளது. ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வதை சட்டபூர்வமாக அங்கீகரிக்க கோரிய வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியுள்ளது. அதில், தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தன் பாலின ஜோடி திருமண அங்கீகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் இன்று வழங்கிய மாறுபட்ட தீர்ப்பின் அடிப்படையில் தன் பாலின திருமணங்களுக்கான சட்ட அங்கீகாரம் இல்லை என தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் தன்பாலின திருமணங்களை அங்கீகரிப்பது தொடர்பாக உயர் அதிகாரம் கொண்ட குழுவை அமைக்க மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
தன்பாலின திருமணம் தொடர்பான வழக்கில் 3:2 என்ற விகிதத்தில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஐந்தில் மூன்று நீதிபதிகள் தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என தீர்ப்பு வழங்கியுள்ளனர். மேலும், தன்பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்குவது குறித்து நாடாளுமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் எனவும் தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன மருவு தீர்ப்பு அளித்துள்ளது.
மேலும், சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்யவும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு மறுப்பு தெரிவித்தது. தன்பாலின திருமணத்தை அங்கீகரிக்காததால் சிறப்பு திருமணம் மற்றும் வெளிநாட்டு சட்டங்களை ரத்து செய்ய முடியாது எனவும் உச்சநீதிமன்றம் திட்டவட்டமாக கூறியுள்ளது. தன் பாலின திருமணத்துக்கு சட்ட அங்கீகாரம் கோரிய வழக்கில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரச்சூடு, நீதிபதி ரவீந்திர பாட், நீதிபதி நரசிம்மா, நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி ஹீமா கோலி ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு மாற்றப்பட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது.