லியோ படத்தின் 4 மணி காட்சிக்கு அனுமதி கிடையாது – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நடிகர் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது, ‘லியோ’ திரைப்படம் வெளியாகும் நாளில் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிக்க முடியாது. காலை 9 மணி காட்சிக்கு பதில் 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி விண்ணப்பிக்க தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படம் வெளியாக நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது. இதற்கிடையில், 20ம் தேதி முதல் 24 தேதி வரை திரையிடப்படும் நாட்களின் டிக்கெட்கள் விற்று தீர்ந்துவிட்டது. ஆனால், முதல் நாளுக்கான டிக்கெட் இன்னும் ஓபன் ஆக வில்லை, முதல் நாள் சிறப்பு காட்சிக்கு அனுமதிக்கோரி படக்குழு தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகவிருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசு கட்டுப்பாடு வித்துள்ளது. அதன்படி, காலை 9 மணிக்கு தொடங்க முதல் காட்சியை தொடங்க வேண்டும் என அரசாணை வெளயிட்டது.

இந்நிலையில், காலை 9 மணிக்கு தான் சிறப்பு காட்சி தொடங்க வேண்டும் என்றும், நள்ளிரவு 1:30க்குள் அனைத்து காட்சிகளும் முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டது. மேலும், சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயப்படுத்துவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகர் விஜய் நடித்துள்ள ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதிக்க வேண்டும் என்றும், காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கே திரையிட அனுமதிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு ஒன்றை தொடர்ந்தது.

இந்த வழக்கு நேற்று மதியம் 1 மணிக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வருகின்ற 19-ம் தேதியன்று 6 காட்சிகளுக்கு அனுமதி கேட்டோம், ஆனால் 5 காட்சிகளுக்கு மட்டும் தான் அனுமதி அளிக்கப்பட்டது என தயாரிப்பு நிறுவன தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

இதற்கு பதிலளிக்கும் வகையில் அரசு தலைமை வழக்கறிஞர் கூறுகையில், அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதியளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன. ஏற்கனவே, ரசிகர்கள் காட்சிக்கு அனுமதி அளிக்க கூடாது என மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.

இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்திற்கு அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி கோரிய வழக்கின் விசாரணை இன்று காலை 10.30க்கு முதல் வழக்காக விசாணைக்கு வந்தது. அப்போது, லியோ திரைப்படத்தின் காலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க உத்தரவிட முடியாது என்றும், காலை 9 மணி காட்சிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்க தமிழ்நாடு அரசுக்கு அனுமதி கோரி படத்தின் தயாரிப்பு நிறுவனம் மனு அளிக்கலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி, நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்த இந்த வழக்கின் விசாரணையில், நீதிமன்றத்தில் நடந்த சுவாரஸ்ய விவாததின் போது, ரசிகர்களுக்காகதான் 4 மணி காட்சிக்கு அனுமதி கேட்கிறோம் என்று லியோ பட தயாரிப்பு நிறுவனம தங்கள் வாதத்தை முன் வைத்தனர். அதற்கு பதிலளிக்கும் வகையில், ரசிகர்களுக்காகதானே அனைத்து காட்சிகளும் திரையிடப்படுகிறது என்று நீதிபதி பதிலளித்துள்ளார்.

இந்நிலையில், லியோ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி கோரிய விவகாரத்தை தமிழ்நாடு அரசிடம் விட்டு விடுவதாக கூறினார். 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிக்க முடியாது. காரணம், காலை 9 மணிக்குன் தான் முதல் காட்சியை திரையிட வேண்டும் என தமிழக அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது, அந்த விதியை மீற முடியாது.

ஆனால், அக்டோபர் 19-ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை காலை 9 மணிக்கு பதிலாக 7 மணிக்கு காட்சிகளை தொடங்க அனுமதி அளிப்பது தொடர்பாக தமிழக அரசு பரிசீலிக்கட்டும். இது தொடர்பாக, படத்தின் தயாரிப்பு நிறுவனம் அரசிடம் மனு அளிக்கலாம். அந்த மனுவை நாளை மதியத்துக்குள் அரசு பதில் தெரிவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். இதனால், அனுமதி அளித்திருக்கக்கூடிய நேரத்தில் 5 காட்சிகள் திரையிடுவது குறித்து அரசுடன் ஆலோசனை நடத்துங்கள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் பொங்கல் தினத்தை முன்னிட்டு வெளியான திரைப்படத்தின் அதிகாலை 4 மணி காட்சியின் போது, ரசிகர் ஒருவர் உயிரிழந்த விவகாரம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து, திரைப்படங்களுக்கு அதிகாலை காட்சிகளுக்கு  அனுமதி வழங்க கூடாது என ஒருவர் வழக்கு தொடர்ந்திருந்தார், அந்த வழக்கில் 4 மணி காட்சிக்கு இனிமேல் அனுமதியில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது குறிப்பிடத்தக்கது.