ஜெர்மனியில் கருணைக் கொலை செய்யும் சட்டமூலத்திற்கு பாராளுமன்றம் ஒப்புதல் .
ஜெர்மனியின் குற்றவியல் சட்டத்தின்படி கருணைக் கொலை செய்வது குற்றமாகும். இருப்பினும் தற்போது அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன்படி கடுமையான நோயாளிகளை கருணை கொலை செய்வதற்கு அனுமதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. .
இதற்கு பசுமை கட்சி மற்றும் லிபரல் டெமோகரிஸ் கட்சியான எப்ஃ.டி.பி ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதேவேளை கடந்த 2020 ஆம் ஆண்டு கருணைக் கொலை செய்வது தொடர்பில் நடைமுறையில் இருக்கும் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என ஜெர்மன் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.