ருவீற்றருக்குப் போட்டியாக வந்தது “த்ரெட்ஸ்” செயலி.

Kumarathasan Karthigesu-பாரிஸ்

பேஸ்புக் நிறுவனத்தின் மற்றொரு சமூக ஊடகம்.

பேஸ்புக் மற்றும் இன்ஸ்ரகிராம் சமூக இணையங்களது தாய் நிறுவனமாகிய மேற்றா(Meta) “த்ரெட்ஸ்”(Threads) என்ற அதன் புதிய சமூக வலை ஊடகத்தின் செயலியை (app) அறிமுகப்படுத்தி உள்ளது.

தங்களது புதிய செயலி ருவீற்றரை முந்துவதை நோக்கமாகக் கொண்டது என்று மேற்றா நிறுவனத்தின் உரிமையாளர் மார்க் சூக்கர்பேர்க்(Mark Zuckerberg) தெரிவித்திருக்கிறார். அறிமுகப்படுத்தப்பட்ட அடுத்த நான்கு மணிநேரத்தில் சுமார் 50 லட்சம் பேர் புதிய செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர் என்ற தகவலையும் அவர் வெளியிட்டிருக்கிறார்.

எலென் மாஸ்க் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து ருவீற்றர் தளத்தில் அண்மைக்காலத்தில் ஏற்படுத்தப்பட்ட சில மாற்றங்களால் அதிருப்தி அடைந்துள்ள அதன் பயனாளர்கள் புதிய “த்ரெட்ஸ்” செயலியால் ஈர்க்கப்படலாம் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

இங்கிலாந்து உட்பட நூறு நாடுகளில் ‘த்ரெட்ஸ்’ சமூகத்தளம் பாவனைக்கு வந்துள்ளது. ஆனால் ஐரோப்பாவில் ஒழுங்கு விதிகள் தொடர்பான கவலைகள் (regulatory concerns) காரணமாக உடனடியாக அதனைப் பயன்படுத்த முடியாதிருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">