சிறீதரன் – திருமாவளவன் சந்திப்பு! வடக்கு – கிழக்கு அரசியல் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்!

Meiveli Media Team


யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான தொல். திருமாவளவன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். சிரேஷ்ட தமிழ் அரசியல்வாதி எம்.கே. சிவாஜிலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்திருந்த தொல். திருமாவளவன், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனை அவரது யாழ்ப்பாண இல்லத்தில் நேரில் சந்தித்துள்ளார்.
இந்தச் சந்திப்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் சிலரும் கலந்துகொண்டுள்ளனர். இதன்போது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் தற்போதைய அரசியல் நிலைமைகள், ஈழத் தமிழ் மக்களின் சமகால வாழ்வியல் பிரச்சினைகள் மற்றும் அரசியல் அபிலாஷைகள் தொடர்பில் தொல். திருமாவளவன் விரிவாகக் கேட்டறிந்துகொண்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">