திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது’: விஜய்க்காக வீதி வீதியாகப் பிரசாரம் செய்வேன் : வைக்கோ அறிவிப்பு
Meiveli Media Team

திமுக இனி ஒருபோதும் ஆட்சிக்கு வர முடியாது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருநெல்வேலியில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்த அவர், முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமணம் குறித்து அப்போது கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், தற்போது முன்னாள் முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் ரஜினிகாந்த் குடும்பத்தினர் கிரீஸ் நாட்டில் நடத்திய பிரம்மாண்டத் திருமணம் குறித்து ஏன் விமர்சனங்கள் எழவில்லை எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும், தவறுகளைத் தவறு எனச் சுட்டிக்காட்ட ஒருபோதும் தயங்கப்போவதில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, முதல்வர் விஜய்யின் ஆட்சிக்கு ஆதரவு தெரிவித்த வைகோ, அருணா ஜெகதீசன் ஆணைக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் மேலதிக நிவாரணங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அனில் அகர்வாலை முதல்வர் விஜய் சந்திக்கக் கூடாது எனத் தாம் கேட்டுக்கொண்டதாகவும், அதனை ஏற்று அந்தச் சந்திப்பு இடம்பெறவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், விஜய்யின் ஆட்சி ஆறு மாதங்களுக்குள் முடிவடையும் என்ற விமர்சனங்களை நிராகரித்த அவர், தேர்தல் நடைபெற்றால் விஜய் மேலும் 30 தொகுதிகளில் வெற்றி பெறுவார் எனவும் தெரிவித்துள்ளார்.
விஜய்க்கு ஆதரவாகத் தாம் வீதி வீதியாகச் சென்று பிரசாரம் செய்யத் தயாராக இருப்பதாகவும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வருவதற்கு வாய்ப்பில்லை எனவும் வைகோ திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

