ரத்மலானையில் துப்பாக்கிச் சூடு: காயமடைந்த நபர் உயிரிழப்பு

C.G.Prashanthan Sri Lanka - Colombo Reporter for MEIVEL

ரத்மலானை, கந்தவல சந்திப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் ரத்மலானை பகுதியைச் சேர்ந்த 57 வயதுடைய நபராவார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவரினால் இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுத் தப்பிச் செல்லப்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான தீவிர விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.