கொழும்பில் காதலர் தின மலர் வியாபாரம் களைகட்டியது…

காதலர் தினத்தை முன்னிட்டு பூக்கள் வாங்க ஏராளமானோர் கொழும்பு 10 டீன்ஸ் சாலைக்கு வருகை தந்ததை இன்றைய தினம் காணக்கூடியதாக இருந்தது…

பெரிய மற்றும் சிறிய பூக்களை வாங்குவதில் அனைவரும் ஆர்வம் காட்டியிருந்தனர்.

இதன் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மலர் வியாபாரிகள்…
இம்முறை காதலர் தினத்தை முன்னிட்டு மலர் வியாபாரம் பெருமளவு சிறப்பாக நடைபெற்றது. ரோஜா பூக்களுக்கு
நல்ல கிராக்கியும் உள்ளதோடு
எங்கள் வியாபாரம் இம்முறை மிக நன்றாக உள்ளது… என்றனர்…

மேலும்..
நானூறு ரூபாய் முதல் எழுநூறு ரூபாய் வரை மலர் குவளைகளும் விற்பனைக்கு இருந்ததை அவதானிக்க முடிந்தது. அத்துடன், இன்று காதலர் தினத்தை முன்னிட்டு ஏராளமானோர் பூக்களை வாங்க ஆர்வம் காட்டியதாகவும் மலர் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

மருதானை டீன்ஸ் வீதியில் பூக்கள் விற்பனை அமோகமாக இடம்பெற்று வருவதாகவும், அனைவருடைய தேவைக்கேற்ப பூக்களை தயார் செய்வதாகவும் இங்கு வியாபாரிகள் மேலும் தெரிவிக்கின்றனர்.

ஒரு ரோஜா ரூ.300 முதல் ரூ.500 வரையிலும், மலர் குவளைகள் ரூ.1500 முதல் பத்தாயிரம் வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருவதோடு, காதலர் தினத்திற்கான மலர்கள் மட்டுமின்றி சிறப்பு நினைவுப் பொருட்களும் பரிசுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன.
இதேவேளை, பெரும்பாலான இளைஞர்கள் ரோஜா பூக்களை வாங்குவதில் ஆர்வம் காட்டியமையும் குறிப்பிடத்தக்கது…