பிரித்தானியாவில் இடம்பெற்ற தமிழ் தகவல் நடுவத்தின் சர்வதேச மனித உரிமைகள் தினம்
டிலக்சன் மனோரஞ்சன்
சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு தமிழ் தகவல் நடுவத்தின் (TIC) உலக மனித உரிமைகள் தினம் 2024 நிகழ்வு இலண்டனில் நடைபெற்றது.
உலகளாவிய மனித உரிமைகள் பிரகடனத்தை ஐக்கிய நாடுகள் சபை அறிமுகப்படுத்திய 76வது ஆண்டு நிறைவையிட்டு, மனித உரிமைகள் தினத்தை நினைவுகூருவதோடு இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராகவும் உலகெங்கிலுமுள்ள அனைத்து இனத்தினருக்கு எதிராகவும் இழைக்கப்பட்டு வரும் மனித உரிமை மீறல்களை நினைவு கூர்ந்து அவற்றுக்கு எதிராக குரல் கொடுக்கவும் சர்வதேசத்திற்கு வெளிப்படுத்தவும் TIC யினால் ஆண்டுதோறும் மனித உரிமைகள் தின நிகழ்வு நடத்தப்பட்டு வருகின்றது.
2024 ம் ஆண்டுக்கான மனித உரிமை நிகழ்வுகள் இலண்டன் Woodford Woodbridge High School இல் இடம் பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக Hon Jas Atwal MP (MP for Illford South) அவர்களும் சிறப்பு விருந்தினர் பேச்சாளர்களாக முனைவர் ஆதித்தன் ஜெயபாலன் (MA and Phd In Social Anthropology) அவர்களும் Ms Yvonne Schofield (The Campaign Director Of The Srilankan Campaign For Peace & Justice) அவர்களும் Cllr Thevathurai Jeyaranjan (Former Mayor Of Redbridge) மற்றும் Professor Andy Higginbottom (Professor Of International Politics – Kingston University) அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
நிகழ்வின் ஆரம்பமாக TIC ன் நிறுவனர்களில் ஒருவரும் நிறைவேற்றுப் பணிப்பாளருமான அமரர் வைரமுத்து வரதகுமார் அவர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து நிகழ்விற்கு ஒளியூட்டும் வகையில் அதிதிகளினால் மங்கள விளக்கேற்றி நிகழ்வானது இனிதே ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தொடர்ந்து வரவேற்பு நடனம் கலைமாமணி பிரேமலதா தேவி அவர்களின் நெறியாழ்கையில் மாணவி அக்க்ஷரா ராதாகிருஷ்ணன் வழங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து வரவேற்பு உரை TIC இயக்குனர் குழுமத்தின் தலைவரும் TIC ன் மூத்த உறுப்பினருமான திரு V.J.Boss அவர்களினால் நிகழ்வினை வரவேற்று உரை நிகழ்த்தப்பட்டது.
நிகழ்வின் மற்றுமொரு அங்கமாக TIC யின் வரலாறு மற்றும் தமிழர் பாரம்பரிய அருங்காட்சியகம் தொடர்பான செயற்திட்ட ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டது. தமிழர் கலை கலாச்சாரம் பாரம்பரியங்களை அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கும் TIC ன் செயற்திட்ட இலக்கு தொடர்பான ஒரு பார்வையாக இது அமைந்திருந்தது. பின்னர் இச்செய்திட்ட அறிக்கையானது பிரதம விருந்தினராக கலந்து கொண்ட Hon Jas Atwal அவர்களிடமும் Cllr Thavathurai Jeyaranjan அவர்களிடமும்TIC ன் இயக்குனர் குழுமத்தினால் வழங்கி வைக்கப்பட்டது.
தொடர்ந்து முதலாவது விருந்தினர் உரை முனைவர் ஆதித்தன் ஜெயபாலன் அவர்களினால் சமகால மனித உரிமைகள் தொடர்பான உரை நிகழ்த்தப்பட்டது தொடர்ந்து அவருக்கான கௌரவிப்பு நிகழ்வு TIC இன் இயக்குனர் குழுமத்தினால் வழங்கி வைக்கப்பட்டது. தொடர்ந்து இரண்டாவது விருந்தினர் உரை Ms Yvonne Schofield (The Campaign Director Of The Srilankan Campaign For Peacr & Justice) நிகத்தப்பட்டு அவருக்கான கௌரவிப்பும் TIC இன் இயக்குனர் குழுமத்தினால் வழங்கப்பட்டது.
இவ்வாண்டுக்கான மனிதநேய செயற்பாடல்களுக்கான TIC இன் மிகச் சிறந்த கௌரவம் அளிக்கும் மனித உரிமைகள் விருது சிறந்த தைரியமான மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அமரர் விராஜ் மெண்டிஸ் அவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது. இவ்விருதினை அவர் சார்பாக Dr Andy Higginbottom அவர்கள் ஏற்றுக் கொண்டார் தொடர்ந்து மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அமரர் விராஜ் மெண்டிஸ் அவர்களின் மனிதநேய செயல்பாடுகள் மற்றும் தமிழ் சமூகத்திற்கு அவர் ஆற்றிய மனிதநேயப் பணிகள் அவரின் தைரியமான செயல்பாடுகள் தொடர்பான உரை Dr Andy Higginbottom அவர்களால் நிகழ்த்தப்பட்டது.
இரண்டாவது மனித உரிமைகள் விருது சிறந்த மனித நேய செயற்பாட்டாளரான தமிழ் சமூகத்திற்கான உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் முன் நின்று செயல்படும் Liss Philipson (Chair of Justice Through Legal Project – JTLP) அவர்களுக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது.
TIC யின் நிறுவுனர்களில் ஒருவரும் முன்னாள் நிறைவேற்றுப் பணிப்பாளருமான காலம்சென்ற உயர்திரு வைரமுத்து வரதகுமார் அவர்களின் ஞாபகார்த்த விருது (Varadhakumar Memorial Award 2024)
இவ்வாண்டு திரு விசாகன் சுப்பிரமணியம் (Anthropologist, Author & Senior Researcher of TIC) அவர்களின் தமிழ் சமூகம் மீதான மனிதநேயச் செயற்பாடுகள் மற்றும் மனித உரிமைகள் ஆய்வுக்காக வழங்கி கௌரவிக்கப்பட்டது.
பின்னர் பன்நெடுங்கால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள தமிழர்களின் பாரம்பரிய இசையான பறை இசை வாகிசன் தலைமையிலான குழுவினால் இசைக்கப்பட்டது.
தொடர்ந்து மெய்வெளி நாடகக் குழுவின் மிக அற்புதமான “மரணத்தை விட கொடியது” (“Poison Beyond Death” ) எனும் நாடகம் அரங்கேற்றி வைக்கப்பட்டது நாம் கடந்து வந்த பாதையில் அனுபவித்த மிகக் கொடிய வலிகளை மிகவும் உணர்வுபூர்வமாகவும் பார்ப்பவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்யும் வண்ணமாகவும் மெய்வெளி நாடக கலைஞர்களால் மிகச் சிறப்பாக உணர்வுபூர்வமாக அரங்கேற்றப்பட்டது அனைவரினதும் பாராட்டை பெற்றது.
அத்துடன் அரசியல் தலைவர்கள், மத தலைவர்கள், ஏனைய தமிழ் அமைப்புக்களின் பிரதிநிதிகள், மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள், தமிழ் தகவல் நடுவம் தொண்டர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வினை செல்வன் டிலக்சன் மனோராஜன் மற்றும் மகிஷா வரதராசா ஆகியோர் தொகுத்து வழங்கினர்.