சாம் பிரதீபனின் நாடகம் ஏற்படுத்தியிருக்கும் அரசியல் சமூக மாற்றுச் சிந்தனை!

- திலகரட்ணம் - (ஓய்வுபெற்ற ஆசிரியர்)

மெய்வெளி ஆற்றுகை – மரணத்தை விட கொடியது.
மகிழினி விமர்சனத்தில்…
நினைவுகளைக் கொலை செய்யும் காலன்கள்,
நினைவுகளைத் தோண்டி கதை சொல்லும் கற்கள்,
என்ற கருப்பொருள், ஆற்றுகையின் காத்திரத்தை வெளிப்படுத்துகின்றது.
ஆற்றுகையில் காலன்களும், கற்களும் தெளிவாக புலப்படக் கூடிய வடிவமாக வெளிப்பட்டிருப்பது மகிழினியின் விமர்சனத்தில் தெரிகின்றது. இவற்றைப் புலப்படுத்த கையாண்ட உத்திகள் ஆச்சிரியமாக இருந்திருக்கும். உங்கள் முயற்சி காலத்திற்கு ஏற்றது. வாழ்த்துக்கள்.
ஒரு கலைப்படைப்பின் வெற்றி என்பது அதைப் பார்க்கும் போதோ அல்லது அதன் அளிக்கை முறைமை அல்லது அது தாங்கிவந்த கருப்பொருள் குறித்தோ கேள்வியுறும் போதோ மனிதருக்குள் ஏற்படுத்தும் சிந்தனைத் தாக்கத்தின் பிரதிபலிப்பிலேயே தங்கியிருக்கிறது. தற்போது அவுஸ்திரேலியாவில் நிற்கும் நான் இந்த நாடகத்தை அன்று பார்க்கவில்லை. ஆனால் மகிழினி என்பவரின் விமர்சனமும், நாடக நிழற்படங்களும், அளிக்கையின் கருப்பொருளும், கையாண்ட உத்திகளும், எங்கள் அரசியல் சமூக மாற்றுச் சிந்தனை ஒன்றை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. அதைனையே இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
காலன்கள் / கற்கள்
காலன்கள், என்ற பதம் வித்தியாசமானது.
போராட்ட காலத்தில் மனிதத்துவம், சகோதரத்துவம், ஐனநாயகம் பேசி நினைவுகளைக் கொலை செய்த காலன்கள், காட்டிக் கொடுப்பினால் நினைவுகளைத் தோண்டி கதை சொல்லும் கற்கள் . இவர்கள் வித்தியாசமானவர்கள்,
எவ் வழியிலும் தம் நலனைக் காப்பாற்றிக் கொள்ளக் கூடியவர்கள். .
இன்றும் தம் நலன்களைக் வளர்க்க நினைவுகளைக் கொலை செய்யும் கலான்களாக செயற்படுகின்றனர். இவர்கள். தமிழர் தொடர் துயரங்கள்.
ஈழத் தமிழர் வாழ்வில் 13வது திருத்தம் ஒரு வரலாற்றுப் புள்ளி. மாகாணசபை ஒரு காலன் புரட்டு.
மாகாணசபைகள் உருவாக்கப்படும் போதே மாகாண நிர்வாகத்தில் தேசிய அமைச்சின் ஊடுருவலுக்கு வழி செய்யப்பட்டது, இதைக் காரணமாக காட்டி மாகாணசபையில் தேசிய அரச நிர்வாகம் நிறுவப்பட்டது. எமது பிரதேசத்தில் கலான்களின் கரிசணையால் வளங்கள் அதிகரிக்கும் எனக் காரணம் காட்டப்பட்டு சில பாடசாலைகளும் மருத்துவ நிலையங்களும் தேசிய நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது.
கல்வி, மருத்துவ சேவை அடைவுகள், ஊழியரின் அர்பபணிப்பினாலும், முயற்சியினாலும், கரிசனையினைலும் அடையப்படலாமே ஒழிய நிறைவான உட்கட்டுமான வளத்தினால் அல்ல என்பது காலன்களுக்கு தெரியும். ஆனால் தெரியவில்லை.
தற்போது இங்கு வேடிக்கை என்னவெனில் கல்வி , மருத்துவ அடைவுகள் பெருந்தொகை பணச் செலவில் தனியார் கையில் விடப்பட்டிருப்பது . மாகாணசபை நிர்வாகம் நினைவுகளை தோண்டினால் கதை சொல்லும் கற்கள் ஏராளம் . தவிர மாகாணசபை நிர்வாகம் கண் துடைப்பு, அமைச்சரின் தயவுக்காக கைகட்டி நிற்பதும் கட்சியை வளர்ப்பதும் காலன்களின் கைவண்ணம்.
அண்மையில் சாவகச்சேரி மருத்துவமனை விடயம் இந்த (கல்வி)மருத்துவமணை நினைவுகளைக் கொலை செய்த காலன்களுக்கும், தோண்டி கதை சொல்லும் கற்களுக்குமான (தடைகள், பாறைகளுக்கான ) உதாரணம்.
ஆளணி பற்றாக்குறை முறைப்பாடு அரசியல் காலன்களின் இரகசியம். தேசிய மாகாண,மாவட்ட, பிராந்திய, கிராமிய நிர்வாகிகள் என பலர் கதிரைகளை ஆக்கிரமித்துக் கொண்டால் நேரடியாக சேவை செய்வதற்கு ஆளணி பற்றாக்குறை வராமல் இருக்குமா?
ஆனால் தனியார் நிலையங்களில் ஒரு சிலரே முழு நிர்வாகத்தையும் கையாள்வது கவணிக்கத்தக்கது.
காலன்கள் தம் முயற்சியால் மாகாணசபை நிர்வாகத்தில் இருந்த கல்வி, மருத்துவ நிர்வாகங்களில் சில பாடசாலைகளையும், மருத்துவ மணை களையும் தேசிய அமைச்சிடம் ஒப்படைத்து சாதனையாளராக காட்டினர். ஆனால் அமைச்சர் முன் கைகட்டி நிற்பது தான் கண்ட மிச்சம்.
அரச பொது நிர்வாகத்தில் தேசிய, மாகாண, மாவட்ட, பிராந்திய, நிர்வாக மட்டங்கள் நிர்வாகத்தை வலுப்படுத்த முடியவில்லை எனெனில் அமைச்சரின் கட்டளைகளுக்காக எல்லா நிர்வாகிகளும் காத்திருந்தனர். எந்த ஒரு அதிகாரியும் அதிகாரத்தை பிரயோகிக்க துணிவில்லை. ஆனால் கதிரைகளில் இருப்பதற்காக நினைவுகளை கொலை செய்யும் காலன்கள் ஆகி பல தந்திரோபாயங்களைக் கையாண்டு கதிரைகளைக் காப்பாற்றிக் கொண்டனர். மக்கள் நலன் மறந்து நினைவுகளில் கதை சொல்லும் கற்கள் ஆகினர்.
அரசியல் தமிழர் பிரதேசத்தில் சாக்கடையாகிற்று. போராட்ட காலம் தவிர்த்து 50 வருட கால ஐனநாயக ஆட்சியில் , ஒற்றை ஆட்சியில்,கட்சி ஐனநாயக ஆட்சியில்,தமிழர் அரசியல் தரப்பு எல்லாவகை அரசியல் நுட்பங்களையும் பயன்படுத்தி விடிவு காணாத நிலையில் இன்னமும் அரசியல் காய் நகர்த்தல்களை புதிய முலாம் பூசி கையாண்டு, மக்கள் முன்வைக்க முற்படுதலும் நினைவுகளைத் கொலை செய்வதாகவே கொள்ளலாம்.
இந்த அரசியல் தலமைகள் கட்சி திர்மானத்தை நீதிமன்றுக்கு கொண்டு சென்றது நினைவுகளை தோண்டி கதை சொல்லும் கற்கள் எனலாம். மக்கள் பற்றி எத்தகைய அக்கறையும் இல்லாத தமிழ்த் தலைமைகள் ஐனாதிபதி தேர்தலில் பொது தமிழ் வேட்பாளர் என்ற வாதப் பிரதி வாதங்களை முன்வைத்து தம் காலத்தை கடத்துவது நினைவுகளைத் தோண்டி கதை சொல்லும் கற்கள் ஆகும். இச் சூழல்
“ மரணத்தை விட கொடியது.”
அரசியலில், பொது நிர்வாகத்தில், கல்வி, மருத்துவ சேவைகளில் காலன்கள் இனங்காணப்பட்டால் மக்கள் நிம்மதி அடையலாம். ஆனால் மக்களே காலன்களுக்கு வழி அமைக்கின்றனர்.