மீண்டும் உலகப் போர் வெடிக்கும் என்ற பதட்டத்தின்மத்தியில்  பிரித்தானி பிரதமர் ரிஷி சுனக்கின் அறிவிப்பு.

ரஷ்யா, ஈரான் மற்றும் சீனா போன்ற நாடுகளால் ஐரோப்பாவுக்கு அச்சுறுத்தல் அதிகரித்துவரும் நிலையில், பிரித்தானியாவுக்கான பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.  உக்ரைனை திடீரென ஊடுருவிய ரஷ்யா, தைவானுடன் உரசிக்கொண்டே இருக்கும் சீனா, இஸ்ரேல் ஹமாஸ் மோதலை இஸ்ரேல் ஈரான் மோதலாக மாற்றியுள்ள ஈரான், என உலகம் பல்வேறு போர் தொடர்பான செய்திகளைக் கேட்டு, எப்போது எந்த திசையிலிருந்து மூன்றாம் உலகப்போர் வெடிக்குமோ என்ற அச்சத்தில் ஆழ்ந்துள்ளது.

உக்ரைனை ஊடுருவிய ரஷ்யா, தங்கள் மீதும் போர் தொடுக்கலாம் என்ற அச்சம் பல ஐரோப்பிய நாடுகளுக்கு உருவாகியுள்ளது.இப்படிப்பட்ட ஒரு சூழலில், பல நாடுகள், போர் வந்தால் அதை எப்படி எதிர்கொள்வது என்பதைக் குறித்து தீவிரமாக யோசிக்கத் துவங்கியுள்ள நிலையில்   2030 அளவில் பிரித்தானியாவுக்கான பாதுகாப்புச் செலவுகளை 2.5 சதவிகிதம் அதிகரிக்க இருப்பதாக பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

படிப்படியாக பாதுகாப்புக்கான செலவுகளை அதிகரிக்க இருப்பதாக தெரிவித்துள்ள ரிஷி, 2027ஃ28வரை 2.4 சதவிகிதமும், 20230ஃ31வரை 2.5 சதவிகிதமும், பாதுகாப்புச் செலவுகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதாவது, 2024இல் 64.6 பில்லியன் பவுண்டுகளாக இருக்கும் பாதுகாப்புச் செலவுகள், 2028இல் 78.2 பில்லியன் பவுண்டுகளாகவும், 2030ஃ31இல் 87 பில்லியன் பவுண்டுகளாகவும் அதிகரிக்க உள்ளன.