பாரிஸ் பகுதியில்   பொலிசாரால் விலங்கிட்டு இழுத்துச் செல்லப்பட்ட 43 வயதான தமிழ் வர்த்தகர்


பாரிஸ் கிறீரைல் பகுதியில் தனது வீட்டுக்கு வந்து தங்கியிருந்த 13 வயதான சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக  தெரிவித்தே  43 வயதான தமிழ் வர்த்தகர் பொலிசாரால் விலங்கிட்டு இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சுவிஸ்லாந்திலிருந்து அவரது வீட்டுக்கு வந்த சிறுமியின் தாயார் மற்றும் சிறுமி பொலிசாருக்கு கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் வர்த்தகர் கைது செய்யப்பட்டுள்ளார். சுவிஸ்லாந்திலிருந்து வர்த்தகரின் அண்ணன் மற்றும் அண்ணன் மனைவியும் அண்ணனின் 17 வயதான மகனும் அண்ணியின் சகோதரியின் 13 வயதான மகளும் குறித்த வர்த்தகரின் மகனின் 10வது பிறந்தநாளுக்காக வர்த்தகரின் வீட்டில் வந்து தங்கியுள்ளார்கள். வர்த்தகரின் அண்ணன் பிறந்தநாள் முடிவடைந்து சுவிஸ் திரும்பியுள்ளார்.

அண்ணியும் மகனும் அண்ணியின் பெறாமகளும் பிரான்ஸ்சில் 2 நாட்கள் தங்கியிருந்த போதே அண்ணியின் பெறாமகள் துஸ்பிரயோகத்துக்குள்ளானதாக தெரியவருகின்றது.இதேவேளை குறித்த வர்த்தகரின் மனைவி தெரிவிக்கும் போது  தனது வீட்டுக்கு பொலிசார் வந்து கணவரை கைது செய்த பின்னரே துஸ்பிரயோகம் தொடர்பாக தான் அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

அத்துடன் தனது கணவர் அவ்வாறானவர் அல்ல. காலையில் கடைக்கு சென்றால் இரவு 11 மணிக்கே வீட்டுக்கு வருபவர். அவர் தன்னுடனேயே இரவில் தங்குபவர். ஒரு போதும் கணவர் துஸ்பிரயோகம் செய்யவில்லை என தான் ஆணித்தரமாக கூறுவேன். தனது கணவரை கேவலப்படுத்தவே கணவனின் அண்ணி இவ்வாறான செயற்பாட்டை செய்தார் என்றும் விசாரணைகளின் பின்னர் கணவர் நிரபராதி என்பது தெரியவரும் என கூறினார்.