ஆவாக்குழு அருண் ஜதேக அமைப்பாளரானார்: மறுப்புத் தெரிவித்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராக இலங்கை இராணுவ புலனாய்வு பிரிவின் முகவர் எனக் கூறப்படும் அருண் சித்தார்த் நியமிக்கப்பட்டுள்ளார். நாடாளுமன்ற தேர்தலில் அங்கயன் தலைமையில் சுதந்திரக்கட்சியில் போட்டியிட்டு படுதோல்வி அடைந்த அவர் தற்போது கட்சி மாறியுள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்று மாலை தனியார் மண்டபத்தில் இடம்பெற்ற சந்திப்பின்போது
ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட தலைவரும் முன்னாள் நிதி அமைச்சருமான ரவி கருணாநாயக்க இந்த விடயத்தை தெரிவித்தார்.இதேவேளை கடந்த முறை யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க அருண் சித்தார்த் உள்ளிட்ட குழுவினரை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அத்தோடு கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்தபோது யாழ்ப்பாணத்தில் நடந்த போராட்டமொன்றின்போது ஹிருணிகா பிரேமச்சந்திரவுடன் முரண்பட்டு ஐக்கிய தேசியக் கட்சியை விமர்சித்தவருக்கு கட்சியின் மாவட்ட அமைப்பாளர் நியமனமா என கட்சியின் ஆதரவாளர்கள் இடையே அதிருப்தி உருவாகியுள்ளதாக உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாணம் கிளிநொச்சி மாவட்டங்களின் பிரதான அமைப்பாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் செயற்பட்டு வருகிறார்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான புதிய அமைப்பாளரை இன்னும் உத்தியோகப்பூர்வமாக தெரிவு செய்யவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின் நிர்வாகக்குழு உறுப்பினர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.எமது கட்சியின் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை நாம் நாடளாவிய ரீதியில் முன்னெடுத்து வருகின்றோம்.இருந்தபோதிலும், மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்த உத்தியோகப்பூர்வ தீர்மானங்கள் எடுக்கப்படவில்லை என்பதோடு யாழ்ப்பாண மாவட்டத்துக்கான புதிய அமைப்பாளரு