இந்தியாவின் நலனை கருதி  பாஜகவை ஆதரிக்கும் கட்சிகள்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவிப்பு.

ரைசிங் பாரத் என்ற 2 நாட்கள் மாநாட்டை டெல்லியில் நியூஸ் 18 குழுமம் நடத்தி வருகிறது. நேற்று முதல் ஆரம்பமான நிகழ்வில்  இன்று பிரதமர் மோடி இந்த மாநாட்டில் பங்கேற்று பேசவுள்ளார். இன்றைய மாநாட்டில் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய் சங்கர், ஜி 20 மாநாட்டை இந்தியா நடத்தியது மிகப் பெரிய விஷயம். மாபெரும் முயற்சிகளால் தான் இது சாத்தியம் ஆகும்.

கோவிட் மற்றும் உலகளாவிய தொற்றுநோய்களின் போது, உலகின் பல நாடுகளுக்கு இந்தியா கோவிட் -19 தடுப்பூசியை வழங்கியது. கொரோனா பரவலை தடுத்ததில் இந்தியாவின் பங்கு அளப்பரியது. இதன் பின்னணியில் இருந்தவர்கள் பாராட்டுக்குரியவர்கள். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள். உலகின் பல நாடுகளில் இதுபோன்ற முறை நடைமுறையில் இருக்கிறது. அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா வரை, மத அல்லது வரலாற்று அடிப்படையில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளது என அமித்ணா தெரிவித்தார்.

சீனா தொடர்பாக பண்டிட் நேருவை சர்தார் வல்லபாய் படேல் எச்சரித்திருந்தார். ஆனால் அதனை நேரு கவனத்தில் கொள்ளவில்லை. இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களின் பாதுகாப்பையும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு உறுதி செய்துள்ளது.ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது மத்திய அரசு ஆபரேஷன் கங்கா என்ற மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டு அங்கிருந்த இந்தியர்களை பத்திரமாக தாயகத்திற்கு கொண்டு வந்தது. இந்த ஆபரேஷனில் 6 மத்திய அமைச்சர்கள் இடம் பெற்றிருந்தனர்.

இதே போன்று சூடானில் ஆபரேஷன் காவேரி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. கொரோனா தடுப்பூசியை இந்தியா உலக நாடுகளுக்கு வழங்கியதை பாராட்டாதவர் யாருமே இல்லை. வளைகுடா நாடுகளில் 90 லட்சம் இந்தியர்கள் வசித்து வருகின்றனர். நானும் இணை அமைச்சர் முரளீதரனும் அங்கு செல்லும்போதெல்லாம் இந்தியர்களே நன்றாக கவனித்துக் கொள்ளுமாறு அந்நாட்டு அரசுகளை வலியுறுத்துவோம் என்று தெரிவித்தார்.

மேலும், உள்துறை அமைச்சர் அமித் ஷா, மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீர், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கில் வன்முறை 75 சதவீதம் குறைந்துள்ளது. இந்தியாவின் நலனை கருதி பல கட்சிகள் பாஜகவை ஆதரிக்கின்றன. வங்காளம், ஒடிசா, தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக வெல்லும் இடங்கள் அதிகரிக்கும் என்று தெரிவித்தார்.