இலங்கையுடனான 3 ஆவது ஒருநாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 4 விக்கெட்டுகளால் வெற்றி

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி கைப்பற்றியுள்ளது.

இன்று இடம்பெற்ற போட்டியில் 4 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி பங்களாதேஷ் அணி தொடரை இவ்வாறு கைப்பற்றியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 235 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் அதிகபட்சமாக ஜனித் லியனகே ஆட்டமிழக்கமால் 101 ஓட்டங்களைப் பெற்றுக் கொடுத்தார்.

பந்து வீச்சில் பங்களாதேஷ் அணி சார்பில் Taskin Ahmed 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

அதன்படி, 236 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 40.2 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

பங்களாதேஷ் அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய Rishad Hossain 18 பந்துகளில் 48 ஓட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டார்.

Tanzid Hasan 81 ஓட்டங்களையும் Mushfiqur Rahim ஆட்டமிழக்காமல் 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் லஹிரு குமார 4 விக்கெட்டுக்களையும் வனிந்து ஹசரங்க 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.