எம்தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தன் அவர்களின் தாயார்: கவலை தெரிவித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.
இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்பு முகாம்களிலும் ஆயிரக்கணகானோர் தடுத்துவைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில் அவர்களை தேடி அலையும் எம்தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தன் அவர்களின் தாயார் இருக்கிறார் என தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும், 33 வருடம் இந்திய மண்ணில் தனிமை சிறையில் போதிய மருத்துவ வசதிகள் அடைக்கப்பட்டிருந்த சாந்தன் நீதிமன்றால் விடுவிக்கப்பட்ட பின்னரும் இந்திய சிறிலங்கா அரசுகளின் மெத்தனப்போக்கால் ஒன்றரை வருடம் அடைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார் எனும் செய்தி எம்மக்கள் அனைவரையும் தாங்கொணா துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
33 வருடங்களுக்கு பின்னர் தன் மகனின் முகத்தை காணும் ஏக்கத்தில் காத்திருந்த அவரின் தாயார் மற்றும் குடும்பத்தவர்களின் துயரினை எந்த வார்த்தைகளும் ஆற்றுப்படுத்தப்போவதில்லை. அவரின் குடும்பத்தினரின் துயரில் நாமும் இணைந்து கொள்கிறோம். கொடிய இன அழிப்புபோரினால் சிறிலங்கா இந்திய மற்றும் ஏனைய நாடுகளின் சிறைகளிலும் தடுப்புமுகாம்களிலும் ஆயிரக்கணகானோர் தடுத்துவைக்கப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டவர்களாக்கப்பட்டும் இருக்கையில் அவர்களை தேடி அலையும் எம் தேச தாய்மார்களின் அவலத்தின் ஒட்டுமொத்த குறியீடாக சாந்தனின் தாயார் இன்று இருக்கிறார்.
இனியாவது தடுத்துவைக்கப்பட் டவர்களினதும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதும் விடுதலைகள் துரிதப்படுத்தப்படவேண்டும்’ என்றும் கஜேந்திரகுமாா் தெரிவித்தாா்.