மக்கள் மீது விரைவு ரயில் மோதியதில் 12 பேர் பலி.

இந்தியாவின் ஜம்தாராவில் மக்கள் மீது விரைவு ரயில் மோதியதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜார்கண்ட் மாநிலம் ஜாம்தாராவில் புதன்கிழமை (28) கலாஜாரியா ரயில் நிலையத்தில் பயணிகள் மீது ரயில் மோதியதில் குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த சம்பவத்தில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகின்றது.

இருப்பினும் இறப்புகளின் சரியான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வைத்திய குழுக்கள் மற்றும் ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.