200 கோடி வரை வசூல் சாதனை செய்த தி கேரளா ஸ்டோரி.

தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் கடந்த ஆண்டு மே மாதம் வெளியாகி இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் வசூலை குவித்தது. கேரளாவில் கட்டாய மதமாற்றம் செய்யப்பட்டு வருவதாகவும் குறிப்பாக ஹிந்து பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கடத்தப்படுவதாகவும் இந்த படத்தின் கதை அமைக்கப்பட்டு இருந்தது.
இந்த படத்திற்கு ஒரு சில அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும் இந்த படம் நாடு முழுவதும் சக்கை போடு போட்டு வசூல் சாதனை செய்தது என்பதும் ரூபாய் 200 கோடி வரை வசூல் அளித்தது என்பதன் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் திரையரங்குகளில் வசூலை வாரிப்ளித்த தி கேரளா ஸ்டோரி என்ற திரைப்படம் வரும் பிப்ரவரி 16ஆம் தேதி ஜீ5 ஓடிடியில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்கை போலவே ஓடிடியிலும்  இந்த படம் நல்ல வரவேற்பு பெரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது