பிரெஞ்சு கோப்பை-காலிறுதிக்குள் அதிரடியாக நுழைந்தது பிஎஸ்ஜி .

பிரெஞ்சு கோப்பை தொடரில் பார்க் டெஸ் பிரின்சஸ் மைதானத்தில் நேற்று நடந்த போட்டியில் பிஎஸ்ஜி (PSG)  மற்றும் பிரெஸ்ட் (Brest) அணிகள் மோதின. விறு விறுப்பாக தொடங்கிய இந்த ஆட்டமானது ரசிகர்களை கவரும் விதமாக அமைந்தது.

இந்த போட்டியை வென்றால் காலிறுதி போட்டிக்கு தகுதி பெறலாம் என்ற முனைப்போடு இரு அணியும் மைதானத்தில் களமிறங்கியது. பிஎஸ்ஜியின் நட்சத்திர வீரரான கைலியின் எம்பாப்பே ஆட்டத்தின் 34வது நிமிடத்தில் மிரட்டும் அசுர வேகத்தில் ஒரு கோல் அடித்து கோல் கணக்கை தொடங்கி வைத்தார். கோல் அடித்த மகிழ்ச்சியில் ரசிகர்கழும் அவருடன் கொண்டாடினார்கள்.

அதன் பின் தொடர்ந்து அடுத்த மூன்ராவது நிமிடங்களிலேயே, அதாவது 37 வது நிமிடத்தில் பிஎஸ்ஜியின் வீரர் டேனிலோ பெரெய்ரா அபாரமாக கோல் அடித்து அசத்தினார். இதனால் பிஎஸ்ஜி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. அதன் பிறகு ஆட்டத்தின் 43வது நிமிடத்தில் எம்பாப்பே அடித்த ஷாட் ஒன்று கோல் கம்பத்தில் பட்டு வெளியேறியது. இது ரசிகர்களிடையே சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் ஆட்டத்தின் பாதியில் 2-0 என்ற கணக்கில் பிஎஸ்ஜி அணி முன்னிலை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து, ஆட்டத்தின் இரண்டாம் பாதி தொடங்கியது. இரு அணிகளும் கோல் அடிக்க வேண்டுமென தீவிரமாக  விளையாடியது. ஆட்டத்தின் 65வது நிமிடத்தில் ப்ரெஸ்ட் அணியின் ஸ்டீவ் மௌரின் தனது தலையால் முட்டி கோல் அடித்து, ப்ரெஸ்ட் அணியின் கோல் கணக்கை தொடங்கி வைத்தார்.

இதனால் 2-1 என்ற கணக்கில் ப்ரெஸ்ட் அணி பின்னிலையில் இருந்தது. ஆட்டத்தின் 90 நிமிடங்கள் முடியும் வரை ப்ரெஸ்ட் அணி போராடியும் கோல் அடிக்க முடியாமல் திணறியது. அதன் பிறகு 90+2 வது நிமிடத்தில் பிஎஸ்ஜி அணியின் கோன்கேலோ ராமோஸ் அபாரமாக கோல் அடித்து 3-1 என்ற கணக்கில் முன்னிலை வகித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் பிஎஸ்ஜி அணி  காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது.