பாரிஸில் கார்களின் தன்மைக்கு ஏற்ப தரிப்பிடக் கட்டணம் அதிகரிக்கப்படுமா?

நகரவாசிகள் மத்தியில் கருத்தறிய வாக்கெடுப்பு

Kumarathasan Karthigesu-பாரிஸ்
பாரிஸ் நகரசபை எல்லைக்குள் தனிப்பட்ட பாவனையில் வைத்திருக்கின்ற கார்களுக்கான தரிப்பிடக் கட்டணங்களை அவற்றின் தன்மைக்கு ஏற்ப அதிகரிப்பதை நீங்கள் ஏற்றுக் கொள்கிறீர்களா?
, 4×4 அல்லது berline போன்ற கார்கள் மற்றும் வாகனங்களுக்கான தரிப்பிடக் கட்டணங்களைச் சாதாரண கார்களுக்கான கட்டணங்களை விடவும் உயர்த்துவது பொருத்தமானதா?
-இவற்றை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா?இவ்வாறு பாரிஸ் நகர வாசிகளது தீர்ப்பை அறிந்துகொள்வதற்கான வாக்கெடுப்பு ஒன்றை நகர சபை இன்று ஞாயிற்றுக்கிழமை
 நடத்துகிறது.
வளிமாசடைவதைத் தடுப்பதற்கும் சுற்றுச் சூழலுக்குத் தீங்கில்லாத நகர வாழ்க்கையை உருவாக்குவதற்கும் பாரிஸ் மாநகரசபை எடுத்துவருகின்ற பல்வேறு திட்டங்களில் ஒன்றாக இந்தத் திட்டமும் முன்னெடுக்கப்படுகிறது.
ஒருவரது தனிப்பட்ட பாவனையில் வைத்திருக்கின்ற காரை அதன் தன்மைக்கு ஏற்ப கனமான (heavy) , பருமனான (bulky) , மாசுபடுத்தும் (polluting) வாகனம் என்ற பிரிவுகளுக்குள் வகைப்படுத்தி அவற்றுக்குத் தனித்தனியே அதிகரித்த தரிப்பிடக் கட்டணங்களைத் தீர்மானிப்பதா என்பதை இந்த வாக்கெடுப்பின் முடிவு தீர்மானிக்கும்.
தலைநகரின் சகல நிர்வாகப் பிரிவுகளிலும் இன்று காலை ஒன்பது மணி முதல் முன்னிரவு ஏழு மணி வரை வாக்களிப்பு 222 நிலையங்களில் நடைபெறுகிறது.
நான்கு சக்கர இயக்கி பொருத்தப்பட்ட – விசாலமான – பருமனான உடல் அமைப்புக் கொண்ட பொழுதுபோக்கு கார்கள் (SUV) – 4×4 அல்லது 4WD என்று அழைக்கப்படுகின்ற – ஒரே சமயத்தில் நான்கு சக்கரங்களுக்கும் முறுக்கு விசை வழங்குகின்ற – பாரமான கார்கள் – sedan அல்லது saloon என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படுகின்ற பயணிகள் மற்றும் சரக்குகளுக்கான தனித்தனி மூன்று பெட்டிகள் கொண்ட ஒற்றை இயந்திரக் கார்கள்(berline) – போன்ற வாகனங்களுக்கான தரிப்பிடக் கட்டணங்களையே மூன்று மடங்காக அதிகரிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.
style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">