இலங்கையில் யுக்திய நடவடிக்கை : ஐ.நா விமர்சனங்களைப் புறந்தள்ளும் வகையில்  அமைச்சர் டிரான் அலஸ் கருத்து.

இலங்கையில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள, போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட சுற்றிவளைப்பு தேடுதல் மற்றும் கைது நடவடிக்கையான  ‘யுக்திய’வை நிறுத்த முடியாது என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இந்த கைதுகள் குறித்து கவலை வெளியிட்ட ஐ.நா விமர்சனங்களைப் புறந்தள்ளியுள்ளும் வகையில் அமைச்சர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். யாருடைய அறிக்கையை அடுத்தும் நாங்கள் நிறுத்த மாட்டோம்இ அப்படித்தான் நடப்போம்’ என பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கூறியுள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் சமூகப் பொலிஸ் குழுவால் கடந்த வார இறுதியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் பரபரப்புடன் முன்னெடுக்கப்படும் அந்த நடவடிக்கையை ‘சட்டத்தை அமல்படுத்த மிகவும் கடுமையான வகையில்’ முன்னெடுக்கப்படும் நடவடிக்கை என ஐ நாவின் மனித உரிமைகள் ஆணகை்குழு விமர்சித்துள்ளது.  ஒபெரேஷன் யுக்திய (நீதி)’ என பெயரிடப்பட்டு கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் திகதி ஆரம்பமான நடவடிக்கையில், சந்தேகத்தின் அடிப்படையில் 25, 000 அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.