தைய்வான் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் லாய் சிங்-தே வெற்றி.

உலக நாடுகளின் பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் இடம்பெற்ற தைய்வான் தேர்தலில் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் லாய் சிங்-தே வெற்றி பெற்றுள்ளார்.

லாய் சிங்-தேவின் தேர்தல் வெற்றி, சீனாவுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளதென சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தைவானின் ஆளும் ஜனநாயக முற்போக்குக் கட்சி இன்று இடம்பெற்ற தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்றாவது தொடர்ச்சியான ஜனாதிபதி பதவியை வென்று தக்கவைத்துள்ளது.

தைவானின் தற்போதைய துணைத் தலைவரான லாய் சிங்-தே சனிக்கிழமை மாலை வெற்றியை அறிவித்தார், அதே நேரத்தில் அவரது இரண்டு முக்கிய எதிர்க்கட்சி போட்டியாளர்கள் இருவரும் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளனர்.

“எங்கள் ஜனநாயகத்தில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதியதற்காக தைவான் மக்களுக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். நமது ஜனநாயகத்தை நாம் எவ்வளவு போற்றுகிறோம் என்பதை உலகுக்கு எடுத்துக்காட்டியுள்ளோம்.

இது எங்களின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பாகும்,” என்று லாய் சிங்-தே ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார். மேலும் தனது இரு எதிர் போட்டியாளர்களிடம் இருந்து வாழ்த்துகளையும் பெற்றுக்கொண்டார்.

“ஜனநாயகத்திற்கும் எதேச்சதிகாரத்திற்கும் இடையில் நாம் ஜனநாயகத்தின் பக்கம் நிற்போம் என்று சர்வதேச சமூகத்திடம் கூறுகிறோம்.

இந்த தேர்தலில் லாய் சிங்-தேக்கு 41 சதவீத மக்கள் வாக்குகள் கிடைத்தன, அவருடைய இரண்டு முக்கிய எதிர் போட்டியாளர்கள் முறையே 33 சதவீதம் மற்றும் 26 சதவீதத்துடன் பின்தங்கியுள்ளனர்.