ஜனாதிபதித் தேர்தலின் பின் ரணில் தலைமையில் புதிய கூட்டணி.

ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கவனம் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்காக எதிர்வரும் நாட்களில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற உள்ளதாக கூறப்படுகின்றது.

கலந்துரையாடல்களில் தேசிய அரசாங்கமொன்றை அமைப்பதற்கான கூட்டணி உருவாக்கப்பட உள்ளதாகவும்

ஏப்ரல் மாதத்தில் இது தொடர்பிலான திட்டத்தை வெளியிட உள்ளதாகவும் தெரிய வருகிறது.

வடக்கில் தமிழ் கட்சிகள், மலையக அரசியல் கட்சிகள், பொதுஜன பெரமுன மற்றும் ஐக்கிய மக்கள் மக்கள் சக்தியின் சில உறுப்பினர்களை கொண்டு இந்த கூட்டணியை அமைப்பதற்கான ஆலோசனைகள் நடத்தப்பட்டுள்ளன.

இந்தக் கூட்டணி உருவானதன் பின்னர் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை வேட்பாளராக அறிவிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதுடன், அதன் பின்னர் பிரதமர் பதவியை கூட்டணியின் பலமான தலைவர் ஒருவருக்கு வழங்குவது தொடர்பில் இணக்கப்பாடு எட்டப்பட உள்ளதாகவும் தெரிய வருகிறது.