கொழும்பின் பல பகுதிகளில் 16 மணித்தியால நீர் விநியோகத்தடை.

கொழும்பின் சில பகுதிகளில் இன்றைய தினம் 16 மணித்தியால நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் மாலை 5 மணி முதல் நாளை காலை 9 மணி வரை 16 மணிநேர நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அம்பத்தலே நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணாமாக நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

இந்த நிலையில், தேவையான நீரை சேமித்து வைக்குமாறு தேசிய நீர் வளங்கள் வடிகாலமைப்புச் சபை மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.