16 மில்லியனை நிலுவையில் வைத்துள்ள பாராளுமன்றப் பிரதிநிதிகள் .

பாராளுமன்றப் பிரதிநிதிகளின் வீடுகளுக்கு வழங்கப்பட்ட 74 மின் இணைப்புகளுக்கான 16 மில்லியன் ரூபாய் பணம் 2022 ஆம் ஆண்டு இறுதி வரையில், செலுத்தப்படாமல் நிலுவையிலுள்ளது.

2022 ஆம் ஆண்டுக்கான வருடாந்த கணக்காய்வாளர் அறிக்கையின் மூலம் குறித்த தகவல் தெரியவந்துள்ளது.

மேலும் 29 இணைப்புகளுக்கான 5 மில்லியன் ரூபாய்  கட்டணம் 6 வருடங்களுக்கும் மேலாக நிலுவையிலுள்ளதாக குறித்த அறிக்கை தெரிவிக்கிறது .

மேலும் 30 இணைப்புகளுக்கான 3 மில்லியன் ரூபாய் ஒரு வருடத்திற்கும் மேலாக நிலுவையில் உள்ளது.