அமெரிக்கா – சீனா பேச்சுவார்த்தையில் நடந்தது என்ன?

சர்வதேச அளவில் பல்வேறு விவகாரங்களில் எதிரெதிர் நிலைப்பாடு கொண்டுள்ள அமெரிக்கா மற்றும் சீனா நாடுகளுக்கு இடையேயான சந்திப்பு நேற்று நடைபெற்றது. ஆசிய பசுபிக் பொருளாதார ஒத்துழைப்பு மாநாடு அமெரிக்காவில் சாண்ட்பிராசிஸ்கோவில் நடைபெறுவதை முன்னிட்டு நேற்று நான்கு நாள் பயணமாக சீனா அதிபர் ஜி ஜின்பிங அமெரிக்கா சென்றார்.

அங்கு அவருக்கு அரசு முறை வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் சீனா அதிபர் சந்தித்து பேசினார். அப்போது இருநாட்டு தலைவர்கள் மத்தியில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இந்த சந்திப்பு நிறைவடைந்த பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டார்.

அவர் சான்பிராசிஸ்கோவில் பேசுகையில், “அதிபர் ஜி ஜின்பிங்கும் நானும் (ஜோ பைடன்) இரு நாடுகளுக்கு இடையேயான கொள்கை ஒருங்கிணைப்பை முன்னெடுத்து செல்வது குறித்து ஆலோசித்தோம். இரண்டாவதாக மிகவும் முக்கியமான ஆலோசனையாக நாங்கள் மேற்கொண்டது இருநாட்டு இராணுவ தொடர்புகள் பற்றியும் ஆலோசித்தோம்.

மீண்டும் இருநாட்டு ராணுவம் தொடர்பான நேரடித் தொடர்புகளை மீண்டும் பெறுகிறோம். எனவே, நாங்கள் இருநாடுகளுக்கு இடையேயான நேரடியான, வெளிப்படையான தகவல்தொடர்புகளை மேற்கொள்ள உள்ளோம்.” என பேசினார்.

நீங்களும்(சீன அதிபர்) நானும் ஒருவரையொருவர் தெளிவாகப் புரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். எந்த தவறான கருத்தும் அல்லது தவறான தகவல்தொடர்புகளும் இரு நாடுகளுக்கு இடையே இருந்துவிட கூடாது .

இரு தரப்பிலும் முக்கியமான தவறான தகவல் தொடர்புகளானது சீனா போன்ற நாடு அல்லது வேறு எந்த பெரிய நாட்டிலும் இருநாட்டு உறவுகளில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே தான் நாங்கள் எங்களின் கருத்துக்களை எப்போதும் நேராகவும் வெளிப்படையாகவும் வெளிப்படுத்துகின்றோம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் செய்தியாளர்களிடம் உரையாற்றினார்.