நடிகை விஜயசாந்தி பாஜகாவில் இருந்து விலகி  காங்கிரஸில் சேரப் போவதாக  தகவல்.

முன்னாள் மேடக் எம்.பி.யும், மூத்த திரைப்பட நடிகையுமான விஜயசாந்தி கட்சி மாற திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜயசாந்தி தற்போது பாஜகவில் உள்ளார். ஆனால், பாஜகவில் அவருக்கு உரிய முக்கியத்துவத்தை தரவில்லை என்று கூறப்படுகிறது. நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் கூட அவருக்கு தேர்தல் தொடர்பான எந்தப் பொறுப்பும் வழங்கப்படவில்லை எனவும் இதனால் விஜயசாந்தி கடும் அதிருப்தியில் உள்ளதாகவும், அதனால் விஜயசாந்தி பாஜக கட்சி நிகழ்ச்சிகளில் இருந்தும் ஒதுங்கி வருகிறார் என கூறப்படுகிறது.

இதற்கிடையில், பாஜகவுக்கு குட்பை சொல்லிவிட்டு விரைவில் காங்கிரஸில் சேரப் போவதாக  மூத்த காங்கிரஸ் தலைவர் மல்லு ரவி கடந்த சனிக்கிழமை தெரிவித்தார்.  கட்சி மாற்றம் குறித்த விவரங்களுக்கு பதிலளித்த விஜயசாந்தி, அப்படி எதுவும் இல்லை என்று மெதுவாக மறுத்தார். மல்லு ரவியின் கருத்துக்கு விஜயசாந்தி கண்டனம் தெரிவித்தார். தற்போதைக்கு எந்த கட்சியும் மாறும் எண்ணம் இல்லை என்று கூறினார்.

இன்று தெலுங்கானாவுக்கு மோடி வருவதையொட்டி, அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு புறப்பட்டதாக அவர் கூறினார். மோடி கலந்து கொள்ள உள்ள கூட்டத்தில் கலந்து கொள்கிறீர்களா..? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர் . அந்தக் கேள்விக்கு அவர் இல்லை, வேறொரு கூட்டத்திற்குப் போகிறேன் என்றார். தெலுங்கானா சட்டசபை தேர்தல் பிரசாரத்துக்காக நேற்று முன்தினம் பிரதமர் மோடி வருகை தந்தார். ஆனால் சமீப காலமாக பாஜக நிகழ்ச்சிகளில் இருந்து விலகி விஜயசாந்தி இருந்ததால் மல்லு ரவியின் கருத்துகள் வலுப்பெற்றுள்ளதாக தெரிகிறது.