பறிக்கப்பட்ட கெஹெலியவின் அமைச்சுப் பதவி – மகிழ்ச்சியில் கம்மன்பில எம்.பி.

கெஹெலிய ரம்புக்வெல்ல அமைச்சுப் பதவியை வகிக்க முடியாது என ஜனாதிபதி தீர்மானித்ததையிட்டு மகிழ்ச்சி அடைவதாக பிவித்துரு ஹெல உருமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராக வாக்களித்து நாடாளுமன்றத்தில் இருப்பவர்கள் அவரை பாதுகாக்க நடவடிக்கை எடுத்தார்கள்.

நம்பிக்கையில்லா பிரேரணை தீர்மானத்தில் ஆளும் கட்சியினர் நடந்து கொண்டது பிழை, எதிர்கட்சி நடந்துகொண்டது சரி என்று ஜனாதிபதி இன்று தீர்மானித்திருக்கின்றார்.

இங்கு நெருக்கடியாக இருக்கும் மிகப்பெரிய விடயம் ஊழல் மோசடி. ஆகவே அமைச்சர் ரமேஸ் பத்திரன இந்த திருடர்களுடன் போராடி ஜெயிக்க வேண்டும்.

இந்த விடயத்தை மாற்றுவது என்பது இலகுவான விடயம் அல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.