ஸ்ரீ முரளி கிருஷ்ண சுவாமிஜியை ஆதரிப்பவர்களும் எதிர்ப்பவர்களும் ஈழத்தமிழர்களாகவே இருந்தனர்

- மெய்வெளி செய்திகளுக்காக நடேசன் -

கைது செய்துபட்டு  பிரித்தானிய காவல்துறையின் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள ஸ்ரீ முரளி கிருஷ்ண சுவாமிஜி, சற்குரு ஸ்ரீ சரவண பாபா என்று பரவலாக அறியப்பட்ட முரளிகிருஷ்ண புலிக்கர் மீதான வழக்கு விசாரணை இன்று ஹரோ முடிக்குரிய நீதிமன்றத்தில்(Harrow Crown Court)நடைபெற்றது.

தடுப்புக்காவலில் இருந்த படியே இணைய வழியாக வழக்கில் இணைந்து இருந்தார் முரளிகிருஷ்ணா. அவருக்கு இணைய வழியில் மலையாள மொழி பெயர்பாளரும் வழங்கபட்டிருந்தது.

2021 முதல் 2023 காலப்பகுதிகளில்  இடம்பெற்றதாக இருவர் முரளிகிருஷ்ண மீது கொடுத்த குற்றச்சாட்டின் அடிப்படையில் பாலியல் பலாத்காரம்(Rape), பாலியல் பலாத்கார முயற்சி(Attempt to Rape) மற்றும் பாலியல் வன்முறை(Sexual Assault) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு விசாரணைக்கு வந்தது.

இந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் மறுத்தார் முரளிகிருஷ்ண தன்னை பிணையில் செல்ல அனுமதிகோரி விண்ணப்பதையும் தனது சட்டவாளர் ஊடாக சமர்பித்தார். பிணை மனு உட்பட, முரளிகிருஷ்ணவின் இதர விசேட தேவைகள்  தொடர்பாக அடுத்த அமர்வில் பரிசீலாக்கலாம் என்று ஜுலை மாதம் 24ஆம் திகதிக்கு வழக்கினை ஒத்தி வைத்தார் நீதிபதி.

மீண்டும் ஆகஸ்ட 28ஆம் திகதி எதிர்தரப்பின் அறிக்கை சமர்பித்தலும் அதனை தொடர்ந்து டிசம்பர் 4ஆம் திகதி முதல் ஒரு வார கால வழக்கின் விசாரணையும் ஆரம்பமாகும் எனவும் நீதிபதி தெரிவித்தார். மேலும் வழக்கின் விசாரணைக்கு முரளிகிருஷ்ண தடுப்பில் இருந்தாலும் அல்லது பிணையில் விடுவிக்கபட்டு இருந்தாலும் நேரடியாக நீதிமன்றத்துக்கு சமூகம் அளிக்க வேண்டும் என்றும், ஏதேனும் நியாமான காரணங்களால் நீதிமன்றுக்கு அவரால் வரமுடியாது போனாலும் வழக்கின் விசாரணை தொடர்ச்சியாக நடைபெறும் என்றும் நீதிபதி அறிவுறித்தினார்.

புகார்தாரர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை (Protection and Privacy) கருதி அவர்கள் பெயர்  அல்லது விபரங்களை வெளியிடுவது முற்றிலுமாக தடை செய்யப்பட்டு இருப்பதையும் நீதிபதி அறிவுறுத்தினார்.

காலை 11மணிக்கு ஆரம்பிக்கபட்ட வழக்கு 11.30 மணிக்கு நிறைவடைந்தது. ஊடகவியலாளர்களை தவிர்த்து நீதிமன்றில் பார்வையாளர் வரிசையில் அமர்ந்திருந்த அனைவரும் ஈழத்தமிழர்களாகவே இருந்தனர். இதில் முரளிகிருஷ்ணவுக்கு ஆதரவு எதிர்ப்பு என்று இரு தரப்பாக அவர்கள் காணப்படனர்.

நீதிமன்ற அமர்வு முடிந்த வெளியே வந்து ஒரு தரப்பை இன்னொரு தரப்பு மாறி மாறி புகைப்படம் எடுத்துக் கொண்டது. விபரம் அறிந்து உடனடியாக தலையிட்ட காவல்துறை அனைவரின் தொலைபேசிகளையும் வாங்கி பரிசோதனை செய்து, புகைப்படம் எடுத்தவர்களின் தொலைபேசியில் இருந்து புகைபடங்களை நிரந்தமாக நீக்க நடவடிக்கை எடுத்ததுடன், மீண்டும் இவ்வாறு நீதிமன்றத்துக்குள் நடந்தால் தடுத்து வைக்கபடுவீர்கள் எனவும் எச்சரிக்கை செய்து அனுப்பியது.