யாழ்ப்பாணத்திலிருந்து – கதிர்காமத்திற்கு சுற்றுலா சென்ற பஸ் விபத்து பலபேர் காயம்.

திருகோணமலை மாவட்டத்தில் இடம்பெற்ற விபத்துகளில் எட்டு பேர் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ மற்றும் திருகோணமலை பொது வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருகோணமலை-மொரவெவ பொலிஸ் பிரிவில் நேற்றிரவு (01) இடம் பெற்ற விபத்திலேயே எட்டு பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

யாழ்ப்பாணத்திலிருந்து – கதிர்காமத்திற்கு திருகோணமலை ஊடாக சுற்றுலா சென்ற பஸ்ஸொன்று இன்று (02) அதிகாலை வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த இளைஞரொருவர் படுகாயம் அடைந்த நிலையில் அவருடைய இரு கால்களும் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

இவ்வாறு படுகாயமடைந்தவர் யாழ்ப்பாணம் – உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பரதன் (33வயது) என்பவரே படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை மஹதிவுல்வெவ விகாரையில் இடம் பெற்ற கலை நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு வீட்டுக்குச் செல்லும்போது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதி ஐவர் காயமடைந்துள்ளனர்.

அத்துடன் திருகோணமலையிலிருந்து-அனுராதபுரம் நோக்கி மோட்டார் சைக்கிள் பயணித்த இளைஞர் ஒருவர் வீதியோரத்தால் நடந்து சென்று கொண்டிருந்த நபரை மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் பஸ் விபத்தில் கால்கள் துண்டிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பஸ்ஸின் சாரதி கைது செய்துள்ளதுடன் விபத்து தொடர்பான விசாரணைகளை மொரவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.