யாழ்.மறைமாவட்ட ஆயரை சந்தித்தார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி!

யாழ்ப்பாணத்திற்கு மூன்று  நாள் விஜயத்தை  மேற்கொண்டிருக்கும்  முன்னாள்  ஜனாதிபதிமைத்திரிபால  சிறிசேன  இன்று (29)  காலை  9.00  மணியளவில்  யாழ்  மறைமாவட்ட   ஆயர்  ஜஸ்ரின்  பேனாட் ஞானப்பிரகாசம்  ஆண்டகையை ஆயர் இல்லத்தி்ல்  சந்தித்துக்  கலந்துரையாடினார்.

இதேவேளை  இன்றைய  தினம்  ஏனைய மதம்  சார்  வழிபாடுகள்  மற்றும்  மதம் சார்ந்தோர்களுடனான  சந்திப்புகளில் ஈடுபடவுள்ளதுடன்  எதிர்வரும்  தினங்களில்  தமிழர்களின்  நீண்டகால  மற்றும்  சமகாலப் பிரச்சினைகள்,  காணி விடுவிப்பு பிரச்சினை, மீனவர்கள் பிரச்சினைகள் மற்றும்  விவசாயிகளின்  பிரச்சினை  தொடர்பாகவும்  பல்வேறு  தரப்பினருடன் சந்திப்புக்களை  மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.