மாகாண சபைகளை மையப்படுத்திய இடைக்கால நிருவாக முறைமையை செயற்படுத்துவதற்கு ஜனாதிபதி ரணில் நடவடிக்கை: சி.வி.விக்னேஸ்வரன் தெரிவிப்பு.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தமது கோரிக்கைக்கு அமைவாக மாகாண சபைகளை மையப்படுத்திய இடைக்கால நிருவாக முறைமையையே செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார் என்று தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச்செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

இதனடிப்படையிலேயே ஜனாதிபதி , இந்தியப் பிரதமர் நரேந்திரமோடியைச் சந்திக்கச் செல்வதோடு தமிழரசுக்கட்சியும் எமது கோரிக்கையுடன் விரைவில் இணைந்து கொள்ளும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.ஜனாதிபதிக்குள்ள மாகாண சபைகளை மையப்படுத்திய இடைக்கால பொறிமுறை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வடக்கு, கிழக்கை மையப்படுத்தி தமிழ்த் தேசியக் கட்சிகள் 13 காணப்படுகின்றன. இதில் கஜேந்திரகுமார் தலைமையிலான அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸைத் தவிர ஏனைய கட்சிகள் 13ஆவது திருத்தச்சட்டத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் உள்ளன.

அந்த அடிப்படையில் தற்போதுமாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படாமையால் நாம் மாகாணங்களுக்கான இடைக்கால நிர்வாகமுறைமையொன்றை உருவாக்குவதற்குரிய பரிந்துரையொன்றை முன்னெடுத்திருந்தோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன், ஜனாதிபதியுடனான இறுதிச் சந்திப்பின்போது அவர் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்படமாட்டாது என்பதைத் தெளிவாகக் கூறியிருந்தார் என்றும், அவரிடத்தில் உள்ள அதிகாரங்களுக்கு அமைவாக மாகாண சபைபனை இயங்கச் செய்டவதற்காக் கூறியிருந்தார் என்றும் அவர் சட்டிக்காட்டினார்.