மத்திய மாகாணத்தில் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு கட்டணம் அறவிட்டு மேலதிக வகுப்பு நடாத்த தடை.
மத்திய மாகாணத்தில் ஆசிரியர்கள் தாம் கற்பிக்கும் மாணவர்களுக்கு பாடசாலை நேரத்திற்கு வெளியில் மேலதிக வகுப்புகளை கட்டணம் அறவிட்டு நடத்துவதை தடுக்கும் வகையில் விசேட சுற்றுநிருபம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
மத்திய மாகாண ஆளுநர் திரு.லலித் யு கமகே அவர்களின் ஆலோசனைக்கு அமைய, மத்திய மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் யு.டி. திரு. ஹேரத் அவர்களால் இது KPDE/2023/01 மற்றும் 2023/06/08 தேதியிட்ட சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சுற்றுநிருபம் நல்ல நோக்கத்தில் பணம் அறவிடப்படாமல் நடாத்தப்படும் வகுப்புக்களுக்கு இடையூறு ஏற்பாடுத்தாது என்றும் பாடசாலைக் கல்வியை நீதமான முறையில் அனைவருக்கும் வழங்கும் நோக்கோடு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.