உலக சாதனை புரிந்த இலங்கை வைத்தியர்கள்.

கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் மூலம் உலகின் மிகப் பெரிய மற்றும் நீளமான சிறுநீரகக் கல்லை அகற்றி வைத்தியர்கள் சாதனைப்படைத்துள்ளனா்.இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பெற்றுள்ளதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர், சிறுநீரக மருத்துவ நிபுணா், லெப்டினன்ட் கேணல் சுதர்ஷனின் தலைமையில் கேப்டன்டபிள்யூ.பி.எஸ்.சி. பதிரத்ன மற்றும் வைத்தியா் தமன்ஷா பிரேமதிலக்க ஆகியோரால் இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கேணல் வைத்தியா் யு.ஏ.எல்.டி பெரேரா மற்றும் கேணல் வைத்தியா் சி.எஸ். அபேசிங்க ஆகியோர் இந்த அறுவை சிகிச்சைக்கு மயக்க மருந்து நிபுணர்களாக கடமையாற்றியுள்ளனர்.
கொழும்பில் உள்ள இராணுவ வைத்தியசாலையில் கடந்த ஜூன் மாதம் 01 ஆம் திகதி இராணுவ வைத்தியர்களினால் சிறுநீரக கல் அகற்றப்பட்டதுடன் இந்த சிறுநீரக கல் 13.372 சென்றி மீற்றா் நீளமும் 801 கிராம் நிறையும் கொண்டது.

கின்னஸ் உலக சாதனைகளின் படிஇ உலகில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மிக நீளமான சிறுநீரக கல் 2004 இல் இந்தியாவில் அறுவை சிகிச்சையின் போது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் நீளம் 13 சென்றி மீற்றா் ஆகும்.அதிகளவு நிறையுடன் கூடிய சிறுநீரக கல், 2008 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் கண்டுபிடிக்கப்பட்டதுடன், அதன் நிறை 620 கிராம் ஆகும்.