பேருந்து கட்டணத்தினை குறைக்க திட்டம்.

ஜூலை 1ம் திகதி முதல் குறைந்தபட்ச பேருந்து கட்டணம் உட்பட அனைத்து பேருந்து கட்டணங்களையும் கிட்டத்தட்ட 20% குறைக்க போக்குவரத்து அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தேசிய கொள்கையின் பிரகாரம், ஜூலை 1 ஆம் திகதி பேருந்து கட்டணத்தை குறைக்கும் பொறுப்பு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதுடன், 12 பிரிவுகள் தொடர்பான கணக்கீடுகளை ஆணைக்குழு மேற்கொண்டு வருவதாக அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எரிபொருள் விலை, வாகன உதிரி பாகங்களின் விலை, டயர் மற்றும் பேட்டரி விலை உள்ளிட்ட 12 வகைகளை கணக்கில் எடுத்துக்கொண்டு, கடந்த கொவிட் காலத்தில் பயணிகளை மட்டும் ஏற்றிச் செல்லும் சட்டத்தின் கீழ் உயர்த்தப்பட்ட 20% பேருந்துக் கட்டண உயர்வுக்கு கூடுதலாக ஒரு சதவீதம் முன்வைக்கப்பட்டுள்ளது. இதுவரையில் குறைக்கப்படாத 10% ஆசனங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

இதன்படி தற்போது 30 ரூபாவாக உள்ள குறைந்தபட்ச கட்டணம் உட்பட அனைத்து கட்டணங்களும் குறைக்கப்படலாம் என குறித்த பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.