கனடாவில் இருந்து திருமணம் ஒன்றிற்காக லண்டன் வந்த இலங்கைத்தமிழர்கள் மூவர் பலி
கனடாவில் இருந்து திருமணம் ஒன்றிற்காக லண்டன் சென்ற யாழ்பாணத்தை பின்புலமாக கொண்ட இலங்கை தமிழர்கள் மூவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இங்கிலாந்தின் தென் கிழக்குப் பிரதேசத்தில் மேற்கு சசெக்ஸ் பகுதியில் கடந்த 10 ஆம் திகதி சனிக்கிழமை மாலை இவ்விபத்து நேர்ந்துள்ளது.இரண்டு கார்கள் மோதியத்தில் விபத்தில் ஈழத் தமிழர்கள் மூவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.உயிரிழந்தவர்
தாய் சுபத்ரா மற்றும் அவரது மகள் அஸ்மிதா ஆகியோரே கார் விபத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன் அவரது மகன் நவீன் இந்த விபத்தில் உயிர் பிழைத்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.இதேவேளை, இவர்கள் பயணம் செய்த பிஎம்டபிள்யூ காரைச் செலுத்திச் சென்றதாகக் கூறப்படும் உறவினரான பெண் ஒருவரும் விபத்தில் உயிரிழந்துள்ளார்.வெள்ளை நிற பிஎம்டபிள்யூ மற்றும் பழுப்பு நிற மேர்சிடிஸ் ஆகிய இரண்டு கார்கள் மோதியே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.இந்த விபத்தில் பிஎம்டபிள்யூ காரில் பயணித்த நால்வரில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் காயங்களுடன் மீட்கப்பட்டிருக்கிறார்.