தேர்தல் நடைபெறுவது சாத்தியமில்லை: அரசு அதிரடி அறிவிப்பு
நாடு எதிர்நோக்கும் பொருளாதார நிலைமையின் அடிப்படையில் 2023 இல் தேர்தல் நடைபெறுவது சாத்தியமில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள வீதிகளை புனரமைப்பதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கை இன்னும் நிதியைப் பெறவில்லை என்றும் அதற்கு 53 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவாகும்.இலங்கை தனது கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அறிவித்தவுடன், நிதி விடுவிக்கப்படும் என்றும், அதுவரை நிதி கிடைக்காது என்றும் அவர் கூறினார். நாங்கள் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு கடன்களைப் பெற்றுள்ளோம் நாங்கள் அதை திருப்பிச் செலுத்தாததால், யாரும் எங்களுக்கு கடன் கொடுக்க தயாராக இல்லை என்று அவர் கூறினார்.