வெளிநாட்டுக் கட்சிகளின் ஆலோசனைகளை வைத்து கட்சியைப் பலப்படுத்த டலஸ் கட்சி திட்டம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை அடிப்படையாக வைத்துப் பல கட்சிகள் தங்களைப் பலப்படுத்தும் வேலையில் ஈடுபட்டுள்ளன. அவற்றுள் ஒன்றான சுதந்திர மக்கள் சபை சர்வதேச மட்டத்தில் கட்சியை விரிவுபடுத்தும் வேலையில் இப்போது இறங்கியுள்ளது.
அண்மையில் பிரிட்டன் சென்று வந்த சுதந்திர மக்கள் சபையின் தலைவர் டலஸ் அழகப்பெரும நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளுக்கும் சென்று அங்குள்ள பல கட்சிகளுடன் பேச்சு நடத்தவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

அந்தக் கட்சிகளுடன் இணைந்து அரசியல் செய்வதுதான் டலஸ் கட்சியின் திட்டம் என்றும் தெரியவருகின்றது.வெளிநாட்டுக் கட்சிகளின் அனுபவம் மற்றும் ஆலோசனைகளை அடிப்படையாக வைத்து கட்சியைப் பலப்படுத்துவதுதான் டலஸ் கட்சியின் நோக்கமாக உள்ளது என்றும் அறியமுடிகின்றது.