அகதிகளை வரவேற்ற மேயருக்கு மிரட்டல்!வீட்டுக்குத் தீ வைப்பு!! பதவி விலகினார்!!!

Kumarathasan Karthigesu

தீவிர வலதுசாரிகளின் வன்முறை ஓங்குகிறது.

பிரான்ஸில் புதிய குடியேற்றச் சட்டத்தை அறிமுகப்படுத்த மக்ரோனின் அரசு தயாராகி வருகின்றது. புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் கடும் போக்குக் கொண்ட வலதுசாரிகளைத் திருப்திப்படுத்திச் சட்டமூலத்துக்கு அவர்களது ஆதரவைத் திரட்ட வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. இந்த நேரத்தில் அகதிகளுக்கும் குடியேறிகளுக்கும் எதிரான தீவிர வலதுசாரி வன்முறைக் குழுக்களின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளன.

தனது நகரத்தில் புகலிடம் கோருவோருக்கான வரவேற்பு நிலையம் (Centre d’accueil de demandeurs d’asile – Cada) ஒன்றை ஆரம்பிப்பதற்கு ஆதரவான நிலைப்பாட்டைக் கொண்டிருந்த நகரசபைத் தலைவர் ஒருவருக்குக் கொலைப் பயமுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளன. இரவு நேரத்தில் அவரது வீட்டின் ஒரு பகுதிக்குத் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களை அடுத்து அவர் தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கிறார்.

பிரான்ஸின் மேற்கில் பேய்-து-லா-லுவா (Pays de la Loire) பிராந்தியத்தில் Saint-Brévin-les-Pins என்ற நகரத்தின் மேயர் யானிக் மோரே (Yannick Morez) என்ற இடதுசாரி மக்கள் பிரதிநிதியே அச்சுறுத்தல் காரணமாகத் தனது பதவி விலகலை அறிவித்திருக்கிறார்.

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதி ஒருவருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட இந்த வன்முறை, அரசியல் மட்டங்களில் கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.

அரசுத் தலைவர் மக்ரோன் உட்பட அரசியல் தலைவர்கள் மேயர் மீதான அச்சுறுத்தலைக் கண்டித்துள்ளனர். நாட்டில் மக்கள் பிரதிநிதிகளது உயிருக்குப் பாதுகாப்பு இல்லை என்று இடதுசாரித் தலைவர்கள் அரசு மீது குற்றம் சுமத்தி வருகின்றனர்.

Saint-Brévin-les-Pins நகரில் தஞ்சக் கோரிக்கையாளர்களை வரவேற்கும் மையத்தைத் திறப்பதற்கு உள்ளூர் மட்டத்திலும் எதிர்ப்புக் காணப்படுகிறது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தீவிர வலதுசாரிக் குழுக்கள் அங்கு எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும் மேற்கொண்டு வந்தன. அதனால் இந்த விவகாரம் உள்ளூர் அரசியல் மட்டங்களில் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

அரசு நிதி உதவியில் இயங்குகின்ற “கடா” (Centre d’accueil de demandeurs d’asile – Cada) அமைப்பு பிரான்ஸில் தஞ்சம் கோரும் வெளிநாட்டவர்களை-அவர்களது விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படுகின்ற காலப் பகுதியில்- கவனித்துப் பராமரிக்கின்ற பெரிய தொண்டு நிறுவனம் ஆகும். அதன் வரவேற்பு மையங்கள் நாட்டின் பல நகரங்களிலும் இயங்கிவருகின்றன.

குடியேறிகளினதும் தஞ்சம் கோருகின்றவர்களினதும் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்அவர்களைப் பராமரிப்பதில் “கடா” நிர்வாகம் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது. புதிதாக வரவேற்பு மையங்களைத் திறக்க வேண்டிய அவசியம் எழுந்துள்ளது.

style="display:block; text-align:center;" data-ad-layout="in-article" data-ad-format="fluid" data-ad-client="ca-pub-4437981831646301" data-ad-slot="6653286411">