ஜனனாயகப் போராட்டத்தை வன்முறையாக மாற்றியவர்கள் யார்? -சுமந்திரன்.

அன்று பிரதமராக இருந்த மகிழ்ந்த ராஜபக்ஷவிற்கு அலரி மாளிகையில் மே ஒன்பதாம் திகதி அன்று காலை ஆதரவாக ஒன்று கூடிய தரப்பினர் காலி முகத்துடலுக்கு சென்று அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்றும் மே ஒன்பதாம் திகதிக்குப் பின்னரே போராட்டம் வன்முறையாகியது என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்து தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை இரண்டாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்

அங்கு மேலும் தெரிவித்த அவர் அப்போதைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை பதவி விலகுமாறு வலியுறுத்தி காலி முகத்திடல் போராட்ட களத்தில் இடம்பெற்ற ஜனநாயகப் போராட்டம் மே ஒன்பதாம் திகதிக்கு பின்னர் தான் வன்முறையாக மாற்றமடைந்தது. அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அலரி மாளிகையில் 9ஆம் திகதி என்று காலை ஆதரவாக ஒன்று கூடிய தரப்பினர் காலி முகத்திடல் அமைதி வழி போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள். காலி முகத்திடல் போராட்ட களத்தின் மீது அரசாங்கம் தாக்குதல் நடத்தினால் அரசாங்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக தற்போதைய ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க அப்போது  தெரிவித்தார்.

ஆனால் தாக்குதல் மேற்கொண்டவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. காலி முகத்திடல் ஜனநாயக போராட்டத்தை வன்முறையாக மாற்றியமைத்த தரப்பினர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் தற்போது உள்ளார்கள் என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். ஜனநாயகப் போராட்டத்தை வன்முறையாக யார் மாற்றியது என்பது தொடர்பில் ஆராய வேண்டும் போராட்டத்தை ஆளும் தரப்பினர் அவரவர் எண்ணம் போல் விமர்சிக்கிறார்கள் உண்மையை மறைத்து விடுகிறார்கள் என்று சுமந்திரன் தெரிவித்தார்